புவியியல்
வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும் பகுதி 1
1. முதல் நிலைத் தொழில் -------------------------அ) மரம்வெட்டுதல்
ஆ) வங்கி வேலை
இ) ஆலோசனை வழங்குதல்
விடை: அ) மரம்வெட்டுதல்
2. ------------- தொழில் புரிவோரை ‘வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்’ என அழைக்கிறோம்.
அ) நான்காம் நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
விடை: அ) நான்காம் நிலை
3. தொழிற்சாலைகள் வளர்ச்சியடைய உதவிபுரியும் சேவை -------------
அ) மேய்த்தல்
ஆ) போக்குவரத்து
இ) வேட்டையாடுதல்
விடை: ஆ) போக்குவரத்து
4. ஐந்தாம் நிலைத் தொழில் அதிகமாகக் காணப்படும் இடங்கள் -----------------
அ) கிராமங்கள்
ஆ) பள்ளிகள்
இ) பெருநகரங்கள்
விடை: இ) பெருநகரங்கள்
5. திட்டம் வகுப்போர் அடங்கிய தொழில் நிலை --------------------
அ) முதல் நிலைத் தொழில்
ஆ) ஐந்தாம் நிலைத் தொழில்
இ) மூன்றாம் நிலைத்தொழில்
விடை: ஆ) ஐந்தாம் நிலைத் தொழில்
6. மனிதர்களின் பொருளாதார நடவடிக்கைகளை ----------------- வகையாகப் பிரிக்கலாம்
அ) நான்கு
ஆ) ஐந்து
இ) மூன்று
விடை: ஆ) ஐந்து
7. மீன் பிடித்தல் என்பது ------- தொழில் ஆகும்
அ) முதல் நிலை
ஆ) இரண்டாம் நிலை
இ) மூன்றாம் நிலை
விடை: அ) முதல் நிலை
8. மனிதர்கள் மூலப்பொருள்களை ------------ பொருளாக மாற்றுகின்றனர்
அ) ஏற்றுமதி
ஆ) உற்பத்தி
இ) முடிவுற்ற
விடை: இ) முடிவுற்ற
9. ஆலோசனை வழங்குவோர்-------------- தொழிலில் அடங்குவர்
அ) மூன்றாம் நிலை
ஆ) நான்காம் நிலை
இ) ஐந்தாம் நிலை
விடை: இ) ஐந்தாம் நிலை
10. வளர்ந்து வரும் நாடுகளில் --------------- தொழில்களில் மக்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்
அ) முதல் மற்றும் இரண்டாம் நிலை
ஆ) மூன்று மற்றும் நான்காம் நிலை
இ) நான்கு மற்றும் ஐந்தாம் நிலை
விடை: அ) முதல் மற்றும் இரண்டாம் நிலை
No comments:
Post a Comment