LATEST

Tuesday, January 7, 2020

சமூக அறிவியல் - பண்டைத் தமிழகம் பகுதி 1

 சமூக அறிவியல்

பண்டைத் தமிழகம் பகுதி 1

#MagmeGuru

 

1. உலகிலேயே மிகத் தொன்மையானதென வரலாற்றறிஞர்களால் கருதப்படுவது.
அ) கங்கைச் சமவெளி
ஆ) விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி
இ) வடமேற்கு இந்தியச் சமவெளி
விடை: ஆ) விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி

2. குமரி முனைக்கு தெற்கே அமைந்திருந்த பெரும் நிலப்பரப்பு ---------- எனப்பட்டது.
அ) குமரிக் கண்டம்
ஆ)பரதக் கண்டம்
இ) ஆப்ரிக்காக் கண்டம்
விடை: அ) குமரிக் கண்டம்

3. மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம்
அ) மத்திய தரைக்கடல் நாடுகள்
ஆ) அசிரியா
இ) லெமூரியா
விடை: இ) லெமூரியா

4. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு.
அ) கி.மு.31
ஆ) கி.பி. 31
இ) கி;.மு.13
விடை: அ) கி.மு.31

5. இடைச் சங்கம் நடைபெற்ற நகரம்
அ) தென்மதுரை
ஆ) கபாடபுரம்
இ) கூடல் நகர்
விடை: ஆ) கபாடபுரம்

6. தமிழ்ப்புலவர்கள் கூடி இலக்கிய ஆய்வு செய்த பண்டைத் தமிழக அமைப்பு சங்கம் எனப்படும்

7. குமரிக்கண்ட மாந்தர்களின் வழிவழிவந்த இனப்பிரிவினரே தமிழ் இனம் ஆகும்

8. தமிழ்நாட்டின் வரலாற்றுக்காலம் சங்க காலத்தில் தொடங்குகிறது.

9. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கணநூல் தொல்காப்பியம்

10. சங்க காலத்தில் உயர்ந்து விளங்கிய தொழில் உழவுத்தொழில்

No comments:

Post a Comment