உயிரியல்- பகுதி 3
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது________i)முன்மூளை மற்றும் நடுமூளை.
ii) நடு மற்றும் பின் மூளை
iii) முன் மற்றும் பின்மூளை
iv) முன்மூளைமற்றும் தண்டுவடம்
2. தண்டுவட நரம்புகள் என்பவை ________
i) உணர்ச்சி நரம்புகள்
ii) இயக்கு நரம்புகள்
iii) கலப்பு நரம்புகள்
iv) மூளையோடு பின்னிப் பிணைந்துள்ளவை
3. கழுத்துப்பகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லாச்சுரப்பி ________
i) அட்ரீனல் சுரப்பி
ii) பிட்யூட்டரிச்சுரப்பி
iii) தைராய்டு சுரப்பி
iv) கணையம்
4. எக்சோகிரைன்இஎண்டோகிரைனாக செயலாற்றும் நாளமில்லாச்சுரப்பி _
i) கணையம்
ii) பிட்யூட்டரி
iii) தைராய்டு
iv) அட்ரீனல்
5. ஒரு டெசி.லி இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்தச் சர்க்கரையின் அளவு
i) 80-100மி.கி/டெசி.லி
ii) 80-120மி.கி/டெசி.லி
iii) 80-150மி.கி/டெசி.லி
iv) 70-120மி.கி/டெசி.லி
6. நோய்த்தொற்றுதலை எதிர்க்கும் வுலிம்போசைட்டுகள் ________ உறுப்பில் மாறுபாடு அடைகின்றன.
i) பாராதைராய்டு சுரப்பி
ii) நிணநீர்ச்சுரப்பி
iii) தைமஸ் சுரப்பி
iv) அட்ரீனல் சுரப்பி
7. மியாஸிஸ்- ஐ இல் ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடியுறுதல் நிலை
i) லெப்டோடீன்
ii) சைகோடீன்
iii) பாக்கிடீன்
iv) டீப்ளோடீன்
8. நமது உடல் உறுப்புகளின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் பணியினைச் செய்யும் இருமண்டலங்கள்________
i) செரிமான மற்றும் இரத்த சுழற்சி மண்டலம்
ii) சுவாசம் மற்றும் இரத்த சுழற்சி மண்டலம்
iii) கழிவுநீக்கம் மற்றும் எலும்பு மண்டலம்
iv) நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலம்
9. நரம்புசெல் இணைப்பு பகுதியில் நரம்பு கடத்துப்பொருளை வெளியிடுவது ________
i) டெண்ரைட்டுகளின் முனைகள்
ii) இணைப்பு குமிழ்கள்
iii) செல் உடல நுண்உறுப்புகள்
iv) ஆக்சானின் மையலின் உறை
10. நோய்த்தடைக்காப்பு மண்டலத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி________
i) தைராய்டு
ii) தைமஸ்
iii) அட்ரினல்
iv) பீனியல்
No comments:
Post a Comment