LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 2 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 2

ஒரு மதிப்பெண் வினாக்கள் 

1. நமது உணவுக்குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி ________
i) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
ii) எண்டமிபா ஹிஸ்டலைட்டிகா
iii) டிரிப்போனோசோமா கேம்பியேன்சி
iv) டீனியா சோலியம்

2. மறைமுகமாக நோய் பரவும் முறை________
i) சளி சிந்துதல்
ii) வாய் வழியாகத் தெரித்தல்
iii) தாய் சேய் இணைப்புத்திசு
iv) நோயாளி பயன்படுத்தும் உடைமைகள்


3. பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிர்ப்பொருள்கள்இ மனிதருக்கு நோய்த்தடுப்பூசியாகப் போடப்படுகின்றன. பின்வருவனவற்றுள்________எவ்வகைத் தடுப்பூசிமுறை?
i) செயற்கையான செயல்மிகு நோய்த்தடுப்புமுறை 
ii) செயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை.
iii) இயற்கையான செயல்மிகு நோய்த்தடுப்புமுறை.
iv) இயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை.


4. பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் கொடுக்கப்படும் நோய்த்தடுப்பூசி________
i) வாய்வழி போலியோ
ii) DPT
iii) DPT மற்றும் போலியோ
iv) BCG


5. ஒரு சிறந்த நல வாழ்க்கையை வாழஇஒவ்வொரு மனிதனும் நல்ல உடல்இமனம் இசமூக நலத்துடன் இருத்தல் வேண்டும். இதில் ஏதேனும் ஒன்று குறைவுபட்டாலும் அவர்________எனப்படுவார்.
(நோயுற்றவர்(அ)உடல்நலம் குறைபாடு உள்ளவர்)


6. ஒரு மாணவி புரத உணவைத் தவிர்த்து அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவை உண்கிறாள்.எந்தச் சத்துக் குறைபாட்டு நோய் அவளுக்கு ஏற்படும்?
i) குவாஷியோர்கர்
ii) மாலைக்கண் 
iii) டயாபட்டிஸ்
iv) டவுன் குறைபாடு


7. உறுதிப்படுத்துதல்:(யு) டயாபட்டிஸ் மெலிடஸ் நோயாளிகளின் இரத்தத்தில் காணப்படும் கூடுதல் சர்க்கரை பயன்படுத்தப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். காரணம்:(சு)கணையம் போதுமான இன்சுலினைச்சுரப்பதில்லை.
i) A மற்றும் R சரியானது.R,Aவுக்கான சரியான விளக்கம் 
ii) A மற்றும் R சரியானது.சுஇயுவுக்கான சரியான விளக்கம் அல்ல.
iii) A சரி ஆனால் R தவறு
iv) யு தவறுஆனால்சு சரி

8. ஒற்றைமுனை நியூரான்கள் காணப்படும் இடம்__________
i) மூளை 
ii) தண்டுவடம்
iii) வளர்கரு நரம்புதிசு
iv) முதிர்ந்த நரம்புதிசு

9. உணர்வுஉறுப்புகளில் அடங்கியுள்ளவை________
i) ஒற்றைமுனை நியூரான்கள்
ii) இருமுனை நியூரான்கள் 
iii) பலமுனை நியூரான்கள்
iv) மெடுல்லேட்டட் நியூரான்கள்

10. நமது உடலின் மனவெழுச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி________
i) சிறுமூளை
ii) பெருமூளை
iii) தலாமஸ்
iv) ஹைபோதலாமஸ்

No comments:

Post a Comment