LATEST

Monday, January 6, 2020

TNPSC புவியியல் பேரண்டம் - வெளிக்கோள்கள் பகுதி 2

வெளிக்கோள்கள் பகுதி 2

யுரேனஸ்
•    பச்சை நிறம்- சாய்வு 98 டிகிரி- வெறும் கண்களால் காண முழயாது. சூரியனிடமிருந்து 2870 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. 
•    ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் நிறைந்த வளிமண்டலம் உள்ளது. 1977 ம் ஆண்டு இக்கோளிலும் வளையங்கள் உள்ளன என வாயோஜர்-2 விண்கலத்தால் கண்டறியப்பட்டன.
•    கிழக்கிலிருந்து மேற்காக வெள்ளி கோளைப் போல சுழல்கிறது. 98 டிகிரி சாய்வில் சுழல்வதால் பம்பரம் போன்று ஒரே அச்சில் சுழலாமல் உருண்டு கொண்டே சுழல்கிறது.
•    யுரேனஸ் (19.6 வானியல் அலகு) 14 புவிப்பொருண்மைகள் கொண்ட வெளிப்புற கிரகங்களுள் மிக இலேசானதாகும். தனிச்சிறப்பான அம்சமாக அமைவது, எல்லா கிரகங்களைக் காட்டிலும் சூரியனை அது அதன் வட்டப்பாதையில் அதன் பக்கமாகவே சுற்றிவலம் வருவதேயாகும்.
•    பிற வாயு ராட்சதர்களைக் காட்டிலும் அது மிகக்குளிர்ந்த மையப்பகுதி கொண்டுள்ளது. 
•    அண்ட வெளியில் சுற்றெறியும் கதிர்வீச்சு வெப்பம் மிகக்குறைந்த பட்சமாகவே உள்ளது. யுரேனஸ் தெரிந்த விவரத்தின்படி 27 துணைக் கோள்கள் கொண்டுள்ளது.
•    அதில் பெரிதென விளங்குவது டைட்டானியா, ஒபேரான், அம்பிரியல், ஏரியல் மற்றும் மிராண்டா ஆகியனவாகும்.

 
நெப்டியூன்
•    1846 ல் கண்டறியப்பட்டது. வாயுக் கோள்களில் மிகவும் தொலைவில் உள்ள கோள்-சூரியனிடமிருந்து 4497 பில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது. 
•    ஹைட்ரஜன், ஹீலியம் நிறைந்த வளிமண்டலம் உள்ளது. இக்கோளிலும் 5 வளையங்கள் உள்ளன.
•    1846 ல் கண்டறியப்பட்ட இக்கோளின் முதல் சுற்று 2010 ம் ஆண்டில் முடிவடைந்தது.
•    யுரேனசைக் காட்டிலும் சிறிதாக இருந்தாலும் நெப்டியூன் (30 வானியல் அலகு) புவியை விட பதினேழு மடங்கு பொருண்மை கொண்டதால் அடர்த்தி அதிகம் உள்ளது. அதன் சுற்று எரியும் உள்வெப்ப வீச்சு ஜுபிடர் அல்லது சனியைப் போல் இல்லை.
•     நெப்டியூன் பதினான்கு தெரிந்த சந்திரனகளைக் கொண்டு உள்ளன. அதில் பெரிய 'ட்ரைடன்' மண்ணியல்பாக நடைமுறையில் உள்ளது. மேலும் வெந்நீர் ஊற்றுகள், திரவ நைட்ரஜன் கொண்டுள்ளன. 
•    ட்ரைடன் தான் ஒரே ஒரு பெரிய சந்திரன் ஆகும். அதன் வட்டப்பாதை பின்னோக்கிச்செல்லும் வண்ணம் இருக்கிறது.
•    நெப்டியூன் அதன் வட்டப்பாதையில் ஏராளமான சிறுகிரகங்களை கொண்டுள்ளன. அவைகள் நெப்டியூன் ட்ரோஜன்கள் ஒன்றுக்கு ஒன்று சரி விகிதத்தில் ஒலியலை அதிர்வுகள் கொண்டதாக உள்ளன.

 
புளுட்டோ
•    இக்கோள் “கிளைடி டோம்பக்” என்பவரால் 1930 ம் ஆண்டு பிப்ரவரி 18 ல் கண்டறியப்பட்டது.
•    இக்கோள் சில நேரங்களில் நெப்டியூன் பாதையில் நுழைந்து வெளியேறுகிறது.
•    இவ்வாறு ஒரு முறை நெப்டியூன் பாதையில் நுழைந்ததால் 1979 முதல் 1999 வரை 20 வருடங்களுக்கு சூரிய மண்டலத்தின் தற்காலிகக் கடைசிக் கோளாக நெப்டியூன் இருந்தது.
•    புளுட்டோ கோள் 2006 ஆகஸ்ட் 24 ம் நாள் சூரிய மண்டலத்தின் 9 வது கோள் மற்றும் கடைசிக் கோள் என்ற அந்தஸ்தை இழந்தது.
•    1978 ல் கண்டறியப்பட்ட புளுட்டோவின் துணைக் கோளுக்கு சரோன் (Charon) எனப் பெயரிடப்பட்டது.
•    பிறகு 2006 ல் ஹப்பிள் தொலைநோக்கியால் கண்டறியப்பட்ட மேலும் இரண்டு துணைக் கோளுக்கு நிக்ஸ் (Nix) மற்றும் ஹைட்ரா (Hydra) எனப் பெயரிடப்பட்டது.
•    புளுட்டோவுக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ள விண்கலம் நியூஹோரைசன்ஸ் ஆகும்.

No comments:

Post a Comment