LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 4 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 4

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. இயற்கை மகபேறுக்காக கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறப்பிற்காக மருத்துவர் பயன்படுத்தும் ஹார்மோன்________
i) ஈஸ்ட்ரோஜென்
ii) புரோஜெஸ்ட்ரான்
iii) இன்சுலின்
iv) ரிலாக்ஸின்

2. மியாஸிஸ் செல்பிரிதலின் முக்கிய நிகழ்வான குறுக்கே கலத்தல் ________ நிலையில் நடைபெறும்
i) லெப்டோடீன்
ii) பாக்கிடீன்
iii) டீப்ளோடீன்;
iv) சைகோட்டின்

3. குன்றல்பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு. குன்றல்பகுப்பு நடைபெறும் செல்கள் ________
i) இனப்பெருக்க எபிதீலியல் செல்கள்
ii) தொடு உணர்வு எபிதீலியல் செல்கள்
iii) க்யூபாய்டல் எபிதீலியல் செல்கள்;
 iv) தூண் எபிதீலியல் செல்கள்;

4. அமீபாவில் நடைபெறும் செல்பகுப்பு முறை ________
i) குரோமேட்டின் வலைப்பின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
ii)குரோமேட்டின் வலைப்பின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை.
iii) குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைகிறது.
iv) உட்கருவில் பிளவை ஏற்படுத்துவதில்லை

5. பின்வருவனவற்றுள் உரிய ஒழுங்கு அமைவு முறை ________
i)சைகோட்டின் --லெப்டோடீன் -- பாக்கிடீன -- டிப்ளோட்டீன் -- டையகைனெசிஸ்
ii)டையகைனெசிஸ் -- சைகோட்டின் -- லெப்டோடீன -- பாக்கிடீன் -- டிப்ளோட்டீன்
iii) லெப்டோடீன் -- சைகோட்டின் -- பாக்கிடீன் -- டிப்ளோட்டீன் -- டையகைனெசிஸ்

6. போலியோ ஒரு வைரஸ் நோய் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கைஇகால் செயலிழந்து விடுகிறது.குழந்தையின்________ உறுப்பு மண்டலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
i) நரம்பு மண்டலம்
ii) செரிமான மண்டலம்
iii) சுவாச மண்டலம்
iv) கழிவுநீக்க மண்டலம்

7. அதிக ஒளிவிழும் போது கண்களை விரைவாக மூடிக்கொள்வதும் வெப்பம்பட்டவுடன் கையை உடனே இழுத்துக் கொள்வதும் அனிச்சை செயலுக்கு சில எடுத்துக்காட்டுகள் ஆகும்.இச்செயலுக்கு மைய நரம்பு மண்டலத்தின் ________ காரணமாகிறது
i) முன்மூளை
ii) தண்டுவடம்;
iii) பின்மூளை
iv) நரம்பு இணைப்புப்பகுதி

8. பின்வருவன நியூரானின் பாகங்கள்
அ) ஆக்சான்
ஆ) கிளைத்தமுடிவுப்பகுதி
இ)செல்உடலம்
ஈ) டென்ட்ரைட்டுகள் எனில்.
நரம்புத்தூண்டலின் சரியான பாதை________
i) ஆஅஈஇ
ii) ஈஇஅஆ
iii)ஆஈஅஇ
iv) அஈஆஇ

9. எளிய அறுவை சிகிச்சையின் போது மருத்துவர் குறிப்பிட்ட பகுதியில் உணர்வறு பொருள்களைப் பயன்படுத்தி நோயாளியின் வலியை உணர இயலாமல் செய்வார்.இதனால் நரம்பு செல்லின் ________ யில் நரம்பு தூண்டல் நிறுத்திவைக்கப்படுகிறது.
அ) செல்உடலம்
ஆ) ஆக்ஸான் 
இ)நரம்பு செல் இணைப்பு பகுதி
ஈ) ஆக்சானின் மையப்பகுதி

10. உறுதிப்படுத்துதல்:(A)அனைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் காரணம்:(R)ஒவ்வொரு தண்டுவட நரம்பும் உணர்ச்சி வேர் மற்றும் நரம்பு வேர் கொண்டுள்ளன.
i) A மற்றும் R சரி.யுக்கு சரியான விளக்கம் சு.
ii) A மற்றும் R சரி.யுக்கு சுசரியான விளக்கம் அல்ல.
iii) A சரி R தவறு
iv) A தவறு R சரி

No comments:

Post a Comment