உயிரியல்- பகுதி 6
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. சிறுநீரகத்தில் நெப்ரானின் ஹென்லி வளைவு பகுதியில் தான் பெருமளவு நீர் மீண்டும் உறிஞ்சப்படுகிறது.பின்வருவனவற்றுள் ________ மிக நீளமான ஹென்லி வளைவு கொண்ட நெப்ரானைப் பெற்று அதிக நீரை மீண்டும் உறிஞ்சி சேமிக்கிறது.i) துருவகரடி
ii) ஒட்டகம்
iii) தவளை
iv) திமிங்கலம்
2. பாலூட்டிகளில் ________ இரத்த அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
i) இளம் இரத்த சிவப்பு அணுக்கள்
ii)இரத்த வெள்ளையணுக்கள்
iii)இரத்தத்தட்டு அணுக்கள்
iv) முதிர் இரத்த சிவப்பணுக்கள்
3. பெயரிடாத இருவாழ்விஇ; பாலூட்டியின் இரத்தபூச்சுகள் அடங்கிய கண்ணாடி நழுவங்கள் தரப்பட்டுள்ளது. இரத்தபூச்சுக்களை எவ்வாறு வேறுபடுத்தி அறிவீர்கள்?
i)நிறத்தை உற்றுநோக்கி
ii) சிவப்பணுக்களை உற்றுநோக்கி
iii) வெள்ளையணுக்களைஉற்றுநோக்கி
iv) பிளாஸ்மாவின் ஆக்ககூறுகளை உற்றுநோக்கி
4. செல்லுலோஸ் செரித்தலுக்கு செல்லுலேஸ் எனும் நொதி தேவைப்படுகிறது செல்லுலேஸ் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்களை சில பாலுட்டிகள் தனது உணவுப்பாதையில் இருக்க செய்து உணவையும் பாதுகாப்பையும் தருகிறது.
பின்வருவனவற்றுள் இச்செயல் மிகுதியாகக்காணப்படுவது ________
i)தாவரஉண்ணிகள்
ii) மாமிசஉண்ணிகள்
iii) அனைத்துண்ணிகள்
iv) இரத்தஉண்ணிகள்;
5. பாலூட்டிகளின் முன்னங்கால்கள் பொதுவான ஒரு அமைப்பினை பெற்றிருந்தாலும் அவை எவ்வேறு விலங்குகளில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்படுகின்றன.இதனை இவ்வாறு அழைக்கலாம்.
i) ஹோமோலோகஸ் உறுப்புகள்
ii) அனாலோகஸ் உறுப்புகள்
iii) எச்ச உறுப்புகள்
iv) வளர்ச்சியுறா உறுப்புகள்;
6. உணர்மீசை உரோமங்கள் காணப்படும் விலங்கு________
i) வெளவால்
ii) யானை
iii) மான்
iv) பூனை
7. யானையின் தந்தங்கள்________ பல்லின் மாறுபாடு ஆகும்.
( வெட்டும் பற்கள்)
8. நான்கு அறைகளுடன் கூடிய வயிறு உடைய விலங்கு________
i) யானை
ii) டால்பின்
iii) மான்
iv) கங்காரு
9. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை________
i) 98.4-98.6F
ii) 96.60-96.8F;
iii) 94.4-98.6F
iv) 98.4-99.6F
10. மிட்ரல் வால்;வு ________ இடையில் காணப்படுகிறது.
i) வலது ஆரிக்கள், வலது வெண்ட்ரிக்கள்
ii) இடது ஆரிக்கள், இடது வெண்ட்ரிக்கள்
iii) வலது வெண்ட்ரிக்கள்;இநுரையீரல் தமனி
iv) இடது வெண்ட்ரிக்கள், பெருந்தமனி
No comments:
Post a Comment