உயிரியல்- பகுதி 7
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. உண்மைக்கருத்து:(A)பாலூட்டியின் இதயம் ஒரு மையோஜெனிக் இதயம் ஆகும். காரணம்:(R) பாலூட்டியின் இதயத்துடிப்பு சிறப்பான தசைக்கற்றைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது(பேஸ்மேக்கர்)
i) A மற்றும் R இரண்டும் சரி. R ஆனது A யை விளக்குகிறது.
ii) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R ஆனது A யை விளக்குவதில்லை
iii) A மட்டும் சரி ஆனால் R தவறு
iv) A தவறு ஆனால் R சரி
2. பாலூட்டி அல்லாத தொகுதியைக் கண்டறிந்து எழுதுக
i) டால்பின்,வால்ரஸ்,முள்ளம்பன்றி,முயல்,வெளவால்
ii) யானை,பன்றி,குதிரை,கழுதை,குரங்கு
iii) ஆண்டிலோப்,மான்,பசு,எருமை,கடமான்
iv) நாய்,பூனை,முதலை,சிங்கம்,புலி
3. பாலூட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது
i) உரோமம்,உணர்உரோமம்,உரோமமுட்கள்
ii) உரோமம்,நகம்,விரல் நகங்கள்
iii) உரோமம்,உணர்உரோமம்இகொம்புகள்
iv)உரோமம்,நகம்,செதில்கள்
4. ஓற்றுமையின் அடிப்படையில் கண்டறிக:
திமிங்கலம்:துடுப்புகள்:வெளவால்:___
(இறக்கை)
5. கோடிட்டவற்றை நிரப்புக:-
இரத்த சிவப்பணு: ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது. இரத்த வெள்ளையணு:
( நோய் கிருமிகளை விழுங்குகிறது)
6. மாறுபாடு அடைந்ததன் அடிப்படையில் ஒருங்கிணைத்து எழுதுக
வெட்டும் பற்கள்,யானையின் தந்தம்,_____முள்ளம் பன்றியின் முட்கள் (ரோமங்கள்)
7. மானோட்ரோபாவில்,உணவுப்பொருள்களை உறிஞ்சுவதற்கான சிறப்பான வேர்கள்
i) ஹாஸ்டோரியங்கள்
ii) மைக்கோரைசா வேர்கள்
iii) பற்று வேர்கள்
iv) வேற்றிடவேர்கள்
8. ஈஸ்ட்டின் காற்றில்லாச்சுவாசத்தினால் உண்டாவது
i) லாக்டிக் அமிலம்
ii) பைருவிக்அமிலம்
iii) எத்தனால்
iv) அசிடிக் அமிலம்
9. நீர்த் தேவைக்காகத் தென்னையின் வேர்கள்இதாய் தாவரத்தை விட்டு வெகுதொலைவில் உள்ளன.அத்தகைய வேர்களின் இயக்கம்
i) ஒளிசார் இயக்கம்
ii) ஈர்ப்புசார்பு இயக்கம்
iii) நீர்ச்சார்பு இயக்கம்
iv) வேதிச்சார் இயக்கம்
10. தாவரங்களில் சைலத்தின் பணி
i) நீரைக்கடத்துதல்
ii) உணவைக்கடத்துதல்
iii) அமினோஅமிலத்தைக்கடத்துதல்
iv) ஆக்சிஜனைக்கடத்துதல்
No comments:
Post a Comment