LATEST

Monday, January 6, 2020

உயிரியல்- பகுதி 9 ஒரு மதிப்பெண் வினாக்கள்

உயிரியல்- பகுதி 9

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. பசுமை வேதியியலினால் உண்டாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு
i) பிளாஸ்டிக்
ii) காகிதம்
iii) உயிரிபிளாஸ்டிக்
iv) ஹேலஜன் தீயணைப்பான்

2. ______பசுமையக வாயு,வெப்பநிலை மாற்றம்,புவிவெப்பமாதலை ஏற்படுத்துகிறது
i) ஹைட்ரஜன்
ii) ஆக்ஸிஜன்;
iii)நைட்ரஜன்
iv) கார்பன் டை ஆக்சைடு

3. ______குளச் சூழ்நிலைத் தொகுப்பில் சிதைப்பவை.
i) தாவரங்கள்;
ii) பாக்டீரியங்கள்
iii)தவளை
iv) தாவர நுண்ணுயிர்கள்

4. மேகங்களைத் தூண்டிச்செயற்கை மழைபெய்யஉதவும் வேதிபொருள்
i)பொட்டாசியம் அயோடைடு
ii)கால்சியம் கார்பனேட்
iii) கந்தக டை ஆக்சைடு
iv) அமோனியம் பாஸ்பேட்

5. படிம எரிபொருளுக்கு எடுத்துக்காட்டு
i) தாமிரம்
ii) இரும்பு
iii) மக்னீசியம்
iv) நிலக்கரி

6. காற்று மாசுபடுதல் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையாலும் தொழிற் சாலை கழிவுகளான CO2, SO2, NO2 ஆகிய வாயுக்களாலும்
ஏற்படுவதைப்போல நீர்மாசுபடுதல்________ஆல் ஏற்படுகிறது
i) கழிவுநீர்
ii) பயிர்சாகுபடி
iii) மழைப்பொழிவு
iv) மண்அரிப்பு

7. வனவிலங்குகள் கொல்லப்படுவதால் நாம் எதிர்கொள்ளும் இன்னல் யாது?
i) இயற்கை சமநிலை பாதித்தல்
ii) பனிப்பொழிவு குறைதல்
iii)மக்கட்;தொகை குறைதல்
iv) மழைபொழிவு அதிகரித்தல்

8. இந்தியாவில் மக்கள்தொகை பெருகிக் கொண்டிருக்கும் சூழலில் நீர் முக்கியமான ஆதாரமாகும்.நீர் வளத்தை மேம்படுத்த நாம் என்ன செய்யலாம்?
i) காடுகளை அழித்தல்
ii) போக்குவரத்தைக் குறைத்தல்
iii)கழிவுகளை எரித்தல்
iv) மரங்களை நடுதல்

9. புலியும் சிங்கமும் விலங்குண்ணிகளாக
இருப்பதைப் போலயானையும் காட்டெருமையும்_ ( தாவர உண்ணிகள் ) ஆகும்

10. கூற்று:(A)நிலக்கரியும்,பெட்ரோலியமும் படிம எரிபொருளாகும்.
காரணம்:(R)பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த இறந்த உயிரினங்கள் புதைந்து படிமபொருளாக மாறியுள்ளது.
i) A மற்றும் R சரி. மற்றும் R, A விற்கான சரியான விளக்கம்.
ii) A மற்றும் R சரி. ஆனால் R, A க்கு சரியான விளக்கம் அல்ல.
iii) A சரி R தவறு
iv) A தவறு R சரி

No comments:

Post a Comment