LATEST

Monday, January 6, 2020

தாவரவியல்- மரபும் பரிணாமமும் ஒரு வரி வினாக்கள் ( TNPSC & IAS)

தாவரவியல்- மரபும் பரிணாமமும்  

ஒரு வரி வினாக்கள் ( TNPSC & IAS)

 


1. மெண்டல் தோட்டப்பட்டாணி (பைசம் சட்டைவம்) செடியில் 7வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார். கீழுள்ளவற்றில் ஒருவகை வேறுபாடு மாறியுள்ளது________

i) நெட்டை மற்றும் குட்டை

ii) விதையின் நிறம் மஞ்சள் மற்றும் பச்சை

iii) நுனி மலர் மற்றும் கோண மலர்

iv) மென்மையான தண்டு மற்றும் கடினமான தண்டு

2. ஆதிமனிதன் தோன்றியது________

i)ஆப்பிரிக்கா

ii) அமெரிக்கா

iii) ஆஸ்திரேலியா

iv) இந்தியா

3. கீழுள்ளவற்றுள் பாரம்பரிய தன்மை கொண்டது________
i) மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு

ii) கல்லீரலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஜீன்கள்

iii) தோல் செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை

iv) பால்மடிச் செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை

4. இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்________

i) சார்லஸ் டார்வின்

ii) ஹியூகோ-டீ-விரிஸ்

iii) கிரிகர் ஜோகன்மெண்டல்

iv) ஜீன் பாப்டைஸ் லமார்க்

5. உடற்செல் ஜீன் சிகிச்சை என்பது________

i) விந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

ii) தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

iii) உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

iv) அண்டச்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

6. பட்டாணிச்செடியின் மஞ்சள் விதையின் பண்பானது,பச்சை நிற விதையின் மேல் ஓங்குதன்மை கொண்டது. கீழுள்ளவற்றுள் பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம் ________

i) GG

ii) Gg

iii) Yy

iv) yy

7. சில மனிதர்களில் நாவினை உருளச்செய்யும் ஓங்குபண்பானது உடல குரோமோசோம்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

(நாவினை உருளச்செய்பவர் = RR/Rr, நாவினை உருளச் செய்ய இயலாதவர் = rr) நாவினை உருளச்செய்யும் குழந்தைக்குஇநாவினை உருளச்செய்யாத ஒரு சகோதரனும் இநாவினை உருளச்செய்யும் இரு சகோதரிகளும் உள்ளனர்.இவர்களின் பெற்றோர்கள் இருவருமே நாவினை உருளச்செய்பவர்கள் எனில் இகீழ்க்கண்டவற்றில் பெற்றோர்களின் மரபணுவாக்கம் ________

i) RR X RR

ii) Rr X Rr

iii) RR X Rr

iv) rr X rr

8. தொகுதி நிடேரியாவைச் சேர்ந்த பலசெல் உயிரியான ஹைட்ராவில் பலவகையான இனப்பெருக்க முறை உள்ளது.

கீழுள்ளவற்றில் புதிய சந்ததி குறிப்பிடும்படியான வேறுபாடுகளுடன் உருவாக்கப்படும் முறை________

i) மொட்டு விடுதல்

ii) இழப்புமீட்டல்

iii) பால் இனப்பெருக்கம்

iv) பாலிலா இனப்பெருக்கம்

9. முதல் குளோனிங் விலங்கான செம்மறி ஆடு டாலி உருவாக்கத்தின் நிகழ்வுகள்

அ) அண்ட செல்லிலிருந்து ஒற்றைமய உட்கரு நீக்கம்

ஆ) இரட்டை மய உட்கரு கொண்ட அண்ட செல்லை வளர்ப்புத்தாயின் கருப்பையில் பதித்தல்

இ) செம்மறிஆட்டின் பால்மடி செல்களைச் சேகரித்தல்.

ஈ) உட்கரு நீக்கப்பட்ட அண்ட செல்லினுள் பால்மடி செல்லின் இரட்டைமய உட்கருவை செலுத்துதல்.

உ) இளம் குளோன் உருவாகுதல்.

மேற்கண்ட நிகழ்வுகளின் சரியான வரிசை அமைப்பு________

i) அ,ஆ,இ,ஈ,உ

ii) இ,அ,ஆ,உ,ஈ

iii)இ,அ,ஈ,ஆ,உ

iv) உ,ஈ,இ,ஆ,அ

10. கீழ்க்காண்பவை ஸ்டெம்செல்கள் (மூலசெல்கள்)

பற்றிய கூற்றுகள்

அ) இவைகள் சிறப்படையாதஃமாறுபாடடையாத செல்கள்

ஆ) இவைகள் உடலின் எந்தவகையான செல்களாகவும் மாறும் திறன் கொண்டவை.

இ) இவை வேகமாகப் பெருக்கமடைந்து ஒரே மாதிரியான அதிக எண்ணிக்கையில் செல்களை உருவாக்குகின்றன.

ஈ) இவைகள் இதய செல்களாகவோ அல்லது நரம்பு செல்களாகவோ மாற்றமடையாது.

உ) இவைகள் இனப்பெருக்கத்தின் வாயிலாகாத் தோன்றும் தலைமுறைகளிலிருந்து பெறப்படுகிறது.

சரியான கூற்று________

i) அ ஆ இ

ii) இ ஈ உ

iii) அ இ உ

iv) ஆ இ ஈ

No comments:

Post a Comment