LATEST

Monday, January 6, 2020

TNPSC புவியியல் பேரண்டம் - உள்கோள்கள் பகுதி 1

உள்கோள்கள் பகுதி 1

•  புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியன் உள்கோள்கள் எனப்படும். இவற்றின் இயல்பு அளவில் சிறியது. பாறைகளால் ஆனது. அடர்த்தி மிகுந்தது. உள்கோள்களுக்கு மற்றோரு பெயர் பாறைக்கோள்கள்- Terrestrial planets.
• சூரியனுக்கு அருகில் உள்ளதால் உள்கோள்கள் (Inferior planets) எனப்படுகின்றன.

புதன்

•    கோள்களில் மிகச் சிறியது. தனது அச்சில் மிக மெதுவாக சுழல்கிறது ( 59 நாட்கள் (அ) 58.6 நாட்கள்)
•    சூரியனை 88 நாட்களில் (87.97 நாட்கள்) வலம் வருகிறது.
•    சூரியனிடமிருந்து 5.79 கோடி கி.மீ தொலைவு.
•    (சூரிய மண்டலத்தில் சூரியனை விரைவாக வலம் வரும் கோள்).
•    நீரை விட 5.25 மடங்கு அடர்த்தி அதிகம். 450 டிகிரி செல்சியஸ் வெப்பம் உடையது.
•    இரவு நேர வெப்பம் -150 டிகிரி செல்சியஸ்; நீர் இருப்பதற்கான ஆதாரம் இல்லை.
•    வாயு மண்டலம் இல்லாததால் சூரியனிடமிருந்து பெற்ற வெப்பத்தை வெளியிடுகிறது.
•    துணைக்கோள்கள் இல்லை. மணிக்கு 1,76,000 கி.மீ வேகத்தில் சுழல்கிறது.
•    புதன் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். இது சூரியனிலிருந்து 0.4 வானியல் அலகு தூரத்திலுள்ளது. இது மிகச்சிறிய (0.055 புவி பொருண்மைகள்) கிரகமும் அகும். இதற்கு இயற்கைத் துணைக்கோள்கள் கிடையாது. இதன் புவியமைப்பு அம்சங்களுக்காக பெயர் பெற்றதாகும். அழுத்தமான எரிமலைவாய்களில் தொங்கும் கூடல் வாய்கள் அமைந்துள்ளன.
•    அவைகள் ஒருவேளை சரித்திர முதல்தோற்றக் காலத்தில் நிகழ்ந்த ஒடுக்கத்தால் உருவாகியிருக்கக்கூடும் .
•    புதனின் வளிமண்டலம் புறக்கணிக்கத்தக்கதாகும். அதில் அணுக்கள் மேற்பரப்பில் கதிரவன் காற்றால் தாக்குண்டு வெடிக்கும்.
•    இது மையப்பகுதியில் இரும்பு உலோகம் ஏராளமாக கொண்டிருக்கும். அதன் 'மூடகம்' (மேண்டில்) பற்றிய விளக்கம் பெறப்படவில்லை. தற்காலிகக் கோட்பாடுகள்ன்படி, அதன் வெளிப்பகுதி அடுக்குகள் ராட்சத பயன்விளைவால் முற்றிலும் களையப்பட்டுள்ளது. மேலும் இளம்சூரியனின் எரிசக்தி திரண்டு உருவாக்குவதைத் தடுத்து வந்துள்ளது.

வெள்ளி

•    பூமிக்கு அருகில் உள்ள கோள். சூரிய மண்டலத்தில் மிகப் பிரகாசமான கோள். “காலை நட்சத்திரம்”, “மாலை நட்சத்திரம்”, “புவியின் இரட்டைப் பிறவி”, “ஆட்டு இடையனின் விளக்கு”, “அழகின் தேவதை” எனப்படுகிறது. சூரியனைச் சுற்றுவதை விட தன்னைத் தானே சுழல அதிக காலம் எடுத்துக் கொள்ளும் கோள்.
•    தனது அச்சில் சுழல 243 நாட்கள், சூரியனைச் சுற்ற 224 நாட்கள்- நிறை, அடர்த்தி மற்றும் உருவ அமைப்பில் பூமியை ஒத்துள்ளதால் “புவியின் இரட்டை” எனப்படுகிறது.
•    சூரியனிடமிருந்து 10.82 கோடி கி.மீ தொலைவு.
•    வளிமண்டலம் கார்பன் டை ஆக்சைடு நிறைந்துள்ளது. சூரியனிடமிருந்து பெறும் வெளிச்சத்தில் 85 சதவீதம் பிரதிபலிக்கப்படுகிறது. CO2 நிறைந்த வளிமண்டலம் இருப்பதால் “பச்சை வீடு விளைவு” (Green House Effect) நடைபெற்று கோள் மிகவும் வெப்பமாக உள்ளது. துணைக் கோள் கிடையாது.
•    வெள்ளி தோற்றத்தில் பூமியை ஒத்திருக்கும். இது சூரியனிலிருந்து 0.7 வானியல் அலகு தூரத்திலுள்ளது. அது பூமியைப்போல் ஒருபருமனான மணல் சத்து (சிலிகேட்) இரும்பு மையத்தில் கொண்டுள்ளது. கணிசமான வளிமண்டலம் மற்றும் உள்ளிருக்கும் மண்ணியல் நடவடிக்கைகளுக்கு உகந்ததாக இருக்கும்.
•    அது பூமியைக்காட்டிலும் வறண்டும் அதன் வளிமண்டலம் ஒன்பது மடங்குகள் அடர்த்தியாகவும் இருக்கும். அதற்கு இயற்கை உபகோள்கள் கிடையாது. அது மிகமிக வெப்பமான கிரகமாகும். அதன் மேற்பரப்பு வெப்பநிலை 400°C இனைவிடக்கூடியது. காரணம் அதன் வளிமண்டலத்தில் பச்சைவீட்டு விளைவு வாயுக்கள் அதிகமாக இருப்பதேயாகும்.
•    நடப்பு மண்ணியல் நடவடிக்கைகள் நடைபெறுவதற்குரிய உறுதியான தடயங்கள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. அதன் வளிமண்டலம் வெறுமையாக்கப்படாமல் தடுக்க அதற்கு காந்தப்புலம் எதுவும் இல்லை. ஆனால் அதன் வளிமண்டலம் தொடர்ந்து எரிமலை வெளியேற்றங்களால் மீண்டும் நிரப்பப்படுகிறது.

No comments:

Post a Comment