சங்க கால அரசியல்
உள்நாட்டு வாணிபம்
• உள்நாட்டு வாணிபத்திற்குப் பண்டமாற்று முறை பயன்படுத்தப்பட்டது.
• நெல்லுக்குப் பதில் உப்பு விற்கப்பட்டது.
• மோரும், நெய்யும் நெல்லுக்கு மாற்றப்பட்டன. தேனும், கிழங்கும் விற்று மீனும், கள்ளும் பெற்றுக் கொண்டனர்.
நெய்தல் நிலத்துப் பரதவர் உப்புடன் மருத நிலத்திற்குச் சென்று நெல் பெற்றுக் கொள்வர். குறிஞ்சி நிலத்துத் தேனும் கிழங்கும், நெய்தல் நிலத்து மீனுக்கும் கள்ளுக்கும் விற்கப்பட்டன.
இவ்வாறான பண்டமாற்று முறையால் உள்நாட்டுப் பொருளாதாரம் தாராளமாக இருந்தது.

அயல் நாட்டு வாணிபம்
• அயல் நாட்டு வாணிபத்திற்குத் தங்க நாணயம் பயன்படுத்தப்பட்டது.
• இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருந்ததால் தமிழகத்திற்குச் சாதகமான வாணிபம் நிலவியது.
• புகார் முக்கியத் துறைமுகப்பட்டினமாகச் சங்க காலத்தில் விளங்கியது.
• ரோமாபுரியுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த காரணத்தினால் தமிழகத்திற்குப் பெரும் செல்வம் கிடைக்கப் பெற்றது.
• இதன் காரணமாகச் சங்க காலத்தில் பொருளாதாரம் வளம் பெற்றது.
• ரோமாபுரி வாணிகர்கள் அரேபியாவின் தென் பகுதியிலுள்ள துறைமுகங்களைப் பயன்படுத்தித் தமிழகத்துடன் நீண்ட நாள் வாணிபத்தில் ஈடுபட்டனர்.
• இதற்குச் சான்று ரோமாபுரி நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றதேயாகும்.
• எகிப்தியர், பினீசியர், கிரேக்கர் ஆகியோரும் வாணிபத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர்.
• மேலும் சீனா, மலேயா, சுமத்திரா போன்ற நாடுகளும் தமிழகத்துடன் வாணிபத் தொடர்பில் இருந்தன.
• மிளகு, இலவங்கம் போன்ற பொருள்கள் தமிழகத்தின் ஏற்றுமதியில் முதலிடம் பெற்றிருந்தன என்பதனை முந்தைய பாடங்களில் படித்து அறிந்தோம்.
• ஆடை வகைகள், வாசனைத் திரவியங்கள், தந்தம், அரிய வகை மரங்கள், உயர்வகைக் கற்கள், மருந்து முதலியனவும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களாகும்.
• கண்ணாடி, உலோகப் பாத்திரங்கள், துணி வகைகள், மதுபானங்கள் போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
• பொதுவாக அயல்நாட்டு வாணிபத்தால் பொருளாதாரம் நிறைவு பெற்று இருந்தது.

No comments:
Post a Comment