LATEST

Thursday, January 30, 2020

சங்க கால அரசியல்

சங்க கால அரசியல்

கால்நடை வளர்த்தல்

•    விவசாய நிலங்களை உழுது சமன் செய்வதற்குக் காளைகளும் எருதுகளும் தேவைப்பட்டன.
•    பாலையும் பாலால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களையும் சங்க கால மக்கள் அன்றாட உணவாக உட்கொண்டனர்.
•    ஆடு மாடுகளை மேய்த்துப் பின்பு அவற்றை விற்பனை செய்தனர்.
•    தயிர், மோர், நெய் போன்றவற்றைத் தயாரித்தனர்.
•    இடையர்கள் இத்தொழிலை மேற்கொண்டனர்.
•    கிராமப்புறங்களில் பொருளாதார நிலை இடையர்களால் வளர்ச்சியடைந்திருந்தது என்று கூறலாம்.

நெசவுத் தொழில்

•    சங்க காலத்தில் பருத்தி, பட்டு ஆகியவற்றால் ஆடைகள் நெய்தனர்.
•    உயர்ந்த துணிகளைச் சங்க காலத்தில் தயாரித்ததாகச் சங்க நூல்கள் கூறுகின்றன.
•    பெரிபுஸ் என்ற நூல் ஆசிரியர் தமிழகத்தின் துணிகளைப் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்.
•    பட்டாடையின் மேன்மை பற்றிப் பொருநராற்றுப்படை கூறுகின்றது.
•    பருத்தி நூல் நூற்பதில் மக்கள் திறமை பெற்றிருந்தனர்.
•    நூல் நூற்ற பெண்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர்.
•    ஆடைகளைத் தைப்பதற்கும் அவர்கள் அறிந்திருந்தனர்.
•    கலிங்கம் என்னும் துணி வகை கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
•    சங்க காலத்தில் துணிகளின் மூலம் பொருளாதாரமும் உயர்ந்தது.

மட்பாண்டத் தொழில்

•    மட்பாண்டத் தொழில் வளர்ச்சியடைந்திருந்தது.
•    ஒவ்வொரு கிராமத்திலும் தனிப்பட்ட இடங்களில் குயவர் குடியிருப்புகள் இருந்தன.
•    குயவர்கள் குடம், பானை, குவளை ஆகியவற்றைத் தயாரித்து, காளவாய்களில் சுட்டு எடுத்தனர்.

மீன் பிடித்தல்

•    பரதவர் என்னும் குலத்தார் மீன் பிடிக்கும் தொழிலை மேற் கொண்டனர்.
•    கட்டு மரங்களிலும், படகுகளிலும் அவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்தனர்.
•    பரதவப் பெண்கள் ஆண்கள் பிடித்து வந்த மீன்களைத் தலையில் சுமந்து கடைவீதிக்குக் கொண்டு சென்று அவைகளைப் பண்டமாற்று முறைப்படி விற்றனர்.
•    இதனால் மீன்பிடிக்கும் தொழிலாலும் பொருளாதாரம் மேன்மை அடைந்தது எனலாம்.

தோல் வேலை

•    தோல் பொருட்கள் செய்யும் தொழிலும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நின்றது.
•    தோலாலும், மரத்தாலும் கால் அணிகள் செய்து கொண்டனர்.

முத்துக் குளித்தல்

•    முத்துக் குளிக்கும் தொழில் மூலமாகத் தமிழ் நாட்டின் வாணிபமும் பொருளாதாரமும் வளர்ந்தன.
•    தமிழ் நாட்டு முத்துக்கள் ரோமப் பேரரசிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

No comments:

Post a Comment