LATEST

Thursday, January 30, 2020

சங்க காலப் பொருளாதாரம்

சங்க காலப் பொருளாதாரம்

•    நாடு வளம் பெற்று இருக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் பொருளாதாரம் செழிப்பாக இருத்தல் அவசியம் ஆகிறது.
•    நாடு வளம் பெறுவதற்குப் பல விதமான தொழில்கள் சிறப்புடன் நடைபெறுதல் அவசியம்.
•    சங்க காலத்தில் விவசாயம் மிக முக்கியத் தொழிலாக விளங்கியது.
•    இதனுடன் நெசவுத்தொழில், கால்நடை வளர்த்தல், மட்பாண்டத் தொழில், மீன் பிடித்தல், தோல் வேலை, முத்துக் குளித்தல், உள்நாட்டு வாணிபம், அயல்நாட்டு வாணிபம் போன்ற தொழில்களும் சிறப்புற்று விளங்கின.

விவசாயம்

•    சங்க காலத்தில் விவசாயம் மக்களின் முக்கியத் தொழிலாக இருந்தது.
•    இத்தொழில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்தது. இதனைக் கண்ட புலவர்கள் விவசாயத்தின் பெருமையினை எடுத்துக் கூறியுள்ளனர்.
•    அக்காலத்தில் பசிப்பிணியைப் போக்குவதற்குக் காரணமான விவசாயம் பெருமைக்குரிய தொழிலாகவும் எண்ணப்பட்டது.
•    விவசாயம் செய்யப்பட்ட தானியங்களில் நெல் முக்கிய இடத்தை வகித்தது.
•    காலம் செல்லச் செல்ல நெற்பயிர் விளைவித்தோருக்குச் சமுதாயத்தில் மதிப்புக் கூடியது.
•    வரகு, தினை ஆகியவை நெல்லுக்கு அடுத்த இடத்தை வகித்தன.
•    கானம், உளுந்து, சாமை, அவரை, மொச்சை, பயறு, கரும்பு ஆகியவைகளும் பயிரிடப்பட்டன.
•    இவைகளோடு பருத்தியும், பலவகைப்பட்ட மூலிகைகளும் விவசாயம் செய்யப்பட்டன.
•    இஞ்சி, மிளகு, தென்னை, கமுகு, புளி, மா, பலா, வாழை போன்றவைகளும் பயிரிடப்பட்டன.
•    மருத நிலம் நீர் வளம் பெற்றிருந்ததால் அங்கு விவசாயம் மிகுதியாக
நடைபெற்றது.
•    ஏனெனில் ஆறுகள் ஓடுவதாலும், நீர் நிலைகள், குளம், ஏரி போன்றவைகள் இருப்பதாலும் இப்பகுதியை மருத நிலம் என்றனர்.
•    காவிரி ஆறு வளப்படுத்திய பகுதியில் நடைபெற்ற விவசாயத்தைப்
பற்றிப் பல சங்க பாடல்கள் கூறுகின்றன.
•    கரிகால் சோழன் காடுகளை அழித்து அவற்றை விளை நிலமாக மாற்றினான். விவசாயம் செழிப்பாக நடைபெற்று வந்ததால் நாட்டின் பொருளாதாரம் சற்று ஓங்கியே காணப்பட்டது.

No comments:

Post a Comment