LATEST

Wednesday, January 29, 2020

வணிகம்

வணிகம்

•    வணிகம் எனப்படுவது ஒரு நாட்டிற்குள்ளேயோ அல்லது பல நாடுகளுக்கு இடையேவோ பொருள்களை பரிமாற்றும் முறையே ஆகும்.
 
வணிகத்தை நிர்ணயிக்கும் காரணிகள்
•    சீரற்றுக் காணப்படும் இயற்கை வள ஆதாரங்கள்
•    தொழில்துறை - பொருளாதாரத்துறை வளர்ச்சி நிலை
•    காலநிலை வேறுபாடு
•    போக்குவரத்து
•    அரசுத்திட்டங்கள்
•    பன்னாட்டு வணிகப்போக்கு
 
வணிக வட்டாரங்கள்
 
1. ஐரோப்பா
•    ஐரோப்பா, ஒரு மக்கள் அடர்த்தி மிகுந்த, தொழில் வளர்ச்சி மிகுந்த மற்றும் வணிக அடர்த்தி (30சதவீதம்) மிகுந்த பகுதியாகும். இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தும் முடிவுற்றபொருள்கள் மற்றும் ஓரளவு மாற்றப்பட்ட மூலப்பொருள்களுமே ஆகும்.
•    தொழிற்சாலைக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஐரோப்பாவின் முக்கியமான இறக்குமதிப் பொருளாகும்.
 
2. வட அமெரிக்கா
•    அரசு ஐக்கிய நாடும், கனடாவும் அதிக அளவு வணிகம் செய்யும் நாடுகளாகும். இந்நாடுகள் இணைந்து இயந்திரங்கள் வாகனங்கள், இராசாயனப்பொருட்கள் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்வதோடு பலவிதமான பொருள்களை இறக்குமதியும் செய்துகொள்கின்றன.
 
3. இலத்தீன் அமெரிக்கா
•    இவ்வட்டாரம் கரீபியன் தீவுகள், மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
•    இப்பகுதிகள் அனைத்தும் உணவுப்பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன.
 
4. ஆப்பிரிக்கா
•    ஆப்பிரிக்கா நாடுகள் கனிமத் தாதுக்களையும் அயனமண்டலத்தின் மூலப்பொருள்களையும் ஏற்றுமதி செய்யும் நாடுகளாகவும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளாகவும் திகழ்கின்றன.
 
5. ஆசியா
•    ஆசியா நாடுகள் மூலப்பொருள்களும் மற்றும் கனிம வளங்களும் அதிகமாக உள்ள நாடுகள் ஆகும். எனவே அவற்றை ஏற்றுமதி செய்கின்றன. ஜப்பான் நாட்டைத் தவிர பிற நாடுகள் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளாகும்.
 
6. ஆஸ்திரேலியா
•    ஆஸ்திரேலியா, வேளாண்மை பொருள்கள் மற்றும் கனிமங்களை ஏற்றுமதி செய்வதுடன் உணவுதானியங்கள், எண்ணெய் மற்றும் இயந்திரங்களை இறக்குமதியும் செய்கின்றன.

No comments:

Post a Comment