LATEST

Thursday, January 30, 2020

சங்க கால மன்னர்கள் - அந்துவஞ்சேரல் இரும்பொறை

அந்துவஞ்சேரல் இரும்பொறை

•    இம்மன்னன் சேர மன்னர்களின் இருபிரிவில் ஒரு பிரிவான இரும்பொறை மரபில் வந்தவன் ஆவான்.
•    இம்மன்னனைப் பற்றி அறிந்துகொள்வதற்குச் சான்றுகள் அவ்வளவாகக் கிடைக்கப் பெறவில்லை.
•    இருப்பினும் ஒரு சான்று மூலம் இம்மன்னனைப் பற்றி அறிந்து கொள்ளமுடிகிறது.
•    ஒரு சமயம் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இவனுடன் பகை கொண்டு இவனது தலைநகராகிய கருவூரை முற்றுகையிட்டான்.
•    அவ்வமயம் யானை மீது ஏறித் தனியே வந்த கிள்ளி சேரர் படைக்குள் புகுந்துவிட்டான்.
•    இதனை அறிந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர், தனித்து வந்தவனுக்குக் கேடு விளைவித்தல் அறமாகாது என எண்ணி, அவனுக்கு ஊறு ஏதும் ஏற்படாதவண்ணம் காக்குமாறு இரும்பொறையை வேண்டிக்கொண்டார்.
•    இச்செய்தி புறநானூற்றுப் பாடல் ஒன்றில் (புறம், 13) சுட்டப்பட்டுள்ளது.
•    இவனைப் பற்றி அறியக் கூடியன இவ்வளவே.

பிற சேர மன்னர்கள்

•    சங்க காலத்தில் சேர நாட்டினைத் திறம்பட ஆண்ட சேர மன்னர்கள் மேலே கூறியவர்கள் மட்டுமின்றி இன்னும் பலர்.
•    அவர்கள் வீரத்திலும், கொடையிலும் தங்களுடைய முன்னோர்களைப் போலச் சிறந்து விளங்கினர். அவர்களைப் பற்றிப் புறநானூறு, பதிற்றுப்பத்து, அகநானூறு ஆகிய நூல்களால் அறிந்து கொள்ளலாம்.
 
அம்மன்னர்கள் வருமாறு:
 
செல்வக் கடுங்கோ வாழியாதன் - புறநானூறு
 
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - பதிற்றுப்பத்து பதிகம் புறநானூறு
 
இளஞ்சேரல் இரும்பொறை - பதிற்றுப்பத்து பதிகம், புறநானூறு
 
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - புறநானூறு
 
குட்டுவன் கோதை - புறநானூறு
 
கோக்கோதை மார்பன் - அகநானூறு
 
சோழிய ஏனாதி திருக்குட்டுவன் - புறநானூறு
 
மாந்தரம் பொறையன் கடுங்கோ - அகநானூறு
 
மாரி வெண்கோ - புறநானூறு
 
யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை - புறநானூறு

No comments:

Post a Comment