LATEST

Wednesday, January 29, 2020

பேரிடர் மேலாண்மை - முன்னெச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள்

பேரிடர் மேலாண்மை – முன்னெச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு நடவடிக்கைகள்

பேரிடர் மேலாண்மை:
இன்றைய சமுதாயம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அபாயங்கல் இயற்கை மற்றும் மனிதன் உருவாக்கி வருகின்ற பேரிடர்கள் ஆகும்.
 
பேரிடர்களின் வகைகள்
•    புயல்
•    வெள்ளம்
•    நிலநடுக்கம்
•    வறட்சி
•    சுனாமி (ஆழிப்பேரலை) 26-12-2004
•    நிலச்சரிவு
•    தீ விபத்து
•    சூறாவளி
•    பனிப்புயல்
•    வெடிவிபத்து
•    இரசாயன மற்றும் தொழிற்சாலைப் பேரிடர்கள்
•    விபத்துகள்
•    தீவிரவாத தாக்குதலினால் உண்டாகும் உயிர்ச் சேதம் மற்றும் பொருட்சேதம்
•    தொற்று நோய்
 
பேரிடர்களின் தாக்கங்கள் :
•    இயற்கை சீற்றத்தால் உருவாகிற பேரிடர்கள், மனிதனால் உருவாக்கப்படுகின்ர பேரிடர்கல் மற்றும் அணு / இரசாயனப் போர்களின் விளைவாக உருவாகின்ற பேரிடர்கள்.
•    உயிர்ச்சேதம்
•    பொருட்சேதம்
•    குடியிருப்புகளுக்குச் சேதம்
•    கால்நடைகள் மற்றும் இதர உயிர்வாழ் பிராணிகளின் உயிர்ச்சேதம்
•    கட்டடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் நீர் நிலைகளுக்கு சேதம்
•    சுகாதாரக் கேடு
•    சுற்றுப்புறச் சூழ்நிலைப் பாதிப்பு
•    நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் பாதிப்பு
•    மக்களின் பொது அமைதிக்குப் பாதிப்பு
•    அடிப்படைத் தேவைகளுக்குக் கடுமையான சேதம்
•    சாதாரண வாழ்க்கை ஸ்தம்பித்தல்
•    பேரிடர் தாக்கத்தைத் கையாள்வதற்கு அதிக அளவிலான மனித சக்தி மற்றும் பொருள் ஆதாரங்களை ஒன்று திரட்டல்.
•    அணு / இரசாயனப் போர்கள் போன்று உலகின் வளர்ந்து வருகின்ற உயிரியல் தீவிரவாதம் பல வடிவங்களில் மனித குலத்தைச் சமீப காலத்தில் பெரிதும் தாக்கியுள்ளது. இதனின் தாக்கங்கள் இன்னும் உலகின் பல்வேறு நாடுகளிலும் நம் நாட்டிலும் பெருகிக் கொண்டே வருகின்றன. மனிதனால் உருவாக்கப்படும் சாதி, மதக் கலவரங்களும் மனித குலத்தை பேரழிவுக்கு கொண்டு செல்கிறது.

No comments:

Post a Comment