LATEST

Wednesday, January 29, 2020

பேரிடர் மேலாண்மையில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கும், கடமைகளும் மற்றும் பொறுப்புகளும்

பேரிடர் மேலாண்மையில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கும், கடமைகளும் மற்றும் பொறுப்புகளும்

•    வருவாய்த்துறையின் அடித்தளமாகக் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.
•    கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அரசின் பிரதிநிதியாகவும் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடுகின்றார்.
•    பேரிடர் மேலாண்மையில் கிராம மக்களுடன் அலுவலரின் மிக முக்கியப் பணிகளில் ஒன்றாகும்,
•    கிராம நிர்வாக அலுவலர்கள் நமது மாநிலத்தில் ஏற்படுகின்ற அற பேரிடர்கள் பற்றியும், நிவாரணப் பணிகள் பற்றியும் தெரிந்துகொள்வது மிக அவசியம்.
 
பெரிய அளவிலான இயற்கைப் பேரிடர்கள்
•    பெரும் வெள்ளம்
•    ஆழிப் பேரவை (சுனாமி)
•    கடும் வறட்சி
•    நிலநடுக்கம்
•    சூறாவளிப் புயல்
 
சிறிய அளவிலான இயற்கைப் பேரிடர்கள்
•    பனிப்புயல்
•    பனிப்பொழிவு
•    இடி, மின்னல்
•    நிலச்சரிவு
•    புயல்காற்று
 
பெரிய அளவிலான செயற்கைப் பேரிடர்கள்
•    தீ விபத்து
•    வெடி விபத்து
•    இராசயன வெடி
•    தீவிரவாதத் தாக்குதல்
•    தொற்று நோய்
 
சிறிய அளவிலானச் செயற்கைப் பேரிடர்கள்
•    சாலை, ரயில், விமான விபத்துகள்
•    விழாக்களில் ஏற்படும் விபத்துகள்
•    தொழிற்சாலை விபத்துகள்
•    விஷம் கலந்த உணவு, சாராயம்
 
பேரிடர் மேலாண்மைக் குழுக்கள்
•    மாநிலம் – மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு
•    மாவட்டம் – மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு
•    ஊராட்சி ஒன்றியம் – ஊராட்சி ஒன்றிய மேலாண்மைக் குழு
•    கிராம ஊராட்சி – ஊராட்சி மேலாண்மைக் குழு
ஒவ்வொரு வகையான பேரிடர்களிலும் கிராம நிர்வாக அலுவலருக்குண்டான பொறுப்புகள் / கடமைகள்.
•    கிராம நிர்வாக அலுவலர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கையெடுத்தல், தாக்குதல் நடந்த பின் அது குறித்து மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தல்
•    பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு நடவடிக்கை எடுத்தல்
•    நிவாரண நடவடிக்கைகள் எடுத்தல், புனர் வாழ்வு அளிக்க ஏற்பாடுகள் செய்தல் ஆகிய அனைத்துப் பணிகளையும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment