LATEST

Wednesday, January 29, 2020

கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கிராம நிர்வாக அலுவலர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெள்ளம்
•    வானிலை ஆராய்ச்சி மையத்தால், வட்டாட்சியர் அலுவலகத்தால் புயல் எச்சரிக்கை தகவல் வரப்பெற்றவுடன் கிராமங்களிலுள்ள நீர்த் தேக்கங்கள், கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் ஏதேனும் உடைப்பு உள்ளதா எனக் கண்டறிந்து சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
•    மீட்பு, பாதுகாப்பு, நிவாரணம் ஆகிய பணிகளில் தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியோரின் உதவியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
•    மீட்புப்பணியில் கிராம மக்கள் தன்னார்வத்துடன் ஈடுபட விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கிராம மக்களிடையே பேரிடர் நேரும் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிர்சி முகாம் நடத்துதல்
•    மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள், போதிய வேலையாட்கள், நீச்சல் தெரிந்தோர் என்று அனைத்து நிலையிலும் தயாராக இருக்க வேண்டும்.
•    மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
•    புயல் பாதுகாப்பு மையங்கள் தவிர, கல்விக் கூடங்கள், கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருப்பதுடன், மக்களை பாதுகாப்பான, இடங்களுக்குக் கொண்டு செல்ல வாகன வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
•    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதிகளை உடனுக்குடன் வழங்க பொதுக்கூட்டங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவுக் கூடங்கள் ஆகியவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 
வறட்சி
 
•    வறட்சியின் போது பயிர் சேதக் கணக்கெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. எனவே பயிர் சாகுபடி பதிவுகள் மற்றும் விளைச்சல் மதிப்பீட்டு சதவீதங்கள் கிராம நிர்வாகா அலுவலரால் முன்னெச்சரிக்கையாகப் பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வறட்சி நிவாரணத்திற்கான சேத மதிப்பீடுகளைக் கணக்கிடுவதிலும் நிவாரணத் தொகை வழங்குவதிலும் மிகுந்த சிரமம் ஏற்படும்.
 
நிலச்சரிவு
 
•    நிலச்சரிவு என்பது பெரிய வகையான இடர்பாடுகளில் ஒன்று. இது பொதுவாக மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்படுகிறது.
•    மலைப்பகுதியிலுள்ள மரங்களை வெட்டுதல், அரசு புறம்போக்கு நிலங்களில் மணல்களை வெட்டி பூமியைச் சேதப்படுத்துதல் போன்றவற்றைக் கண்காணித்து கிராம நிர்வாக அலுவலர்கள், உடனுக்குடன் வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம் நிலப் பரப்பின் தன்மையை பாதுகாக்க கிராம நிர்வாக அலுவலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும்.
 
தீ விபத்து

•    முதலிலே தீயணைப்புத் துறைக்கும், அடுத்ததாக காவல்துறை, வட்டாட்சியர் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்து தீயணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிர்ச்சேதம் ஏற்படா வண்ணம் தீவிரமாகச் செயல்பட வேண்டும்.
•    தீ விபத்து ஏற்பட்டவுடன் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
•    மேலும் தீ பரவுவதற்கு முன் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பைக் துண்டிக்க வேண்டும்.

No comments:

Post a Comment