LATEST

Thursday, January 30, 2020

சங்க கால அரசியல்

சங்க கால அரசியல்

•    சங்க கால அரசியல் எந்த நிலையைப் பெற்றிருந்தது என்பது பற்றிய செய்திகளைத் தக்க சான்றுகளுடன் காண முடிகிறது. மன்னனின் நிலை என்ன என்பதை அறிய முடிகிறது.
•    அரசாளும் பதவியைத் தொன்றுதொட்டு மன்னனின் மூத்த மகனே பெற்று வந்தான் என்ற உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது.
•    மன்னனுக்கு என்று தனி வாள், முரசு, கொடி, மாலை, காவல் மரம், அமைச்சர், தூதுவர், ஒற்றர், படை போன்றவைகள் துணை புரிந்தன என்பது பற்றி அறியமுடிகிறது.
•    சங்க காலத்தில் ஊர்கள் அடங்கியதை ஊராட்சி என்றும், நகர்ப் புறங்கள் நிறைந்த இடத்தை நகராட்சி என்றும் கூறும் வழக்கம் இருந்தது தெரியவருகிறது.
•    பண்டைய தமிழகத்தில் வாணிபம் மிகவும் செழித்து ஓங்கி இருந்தது. ஆதலால் நாட்டின் பொருளாதார நிலையும் வளர்ச்சியுற்று இருந்தது.
•    இப்பாடத்தின் கீழ் சங்ககால மக்களின் வாழ்க்கை முறையையும் படித்துணர்வது அவசியமாகிறது.
•    அதனால் அவர்களின் வாழ்க்கை முறையானது, இல்லற வாழ்வு, உணவு, குலம், கல்வி, கலை, விளையாட்டு என்றெல்லாம் சிறுசிறு தலைப்பின்கீழ் விளக்கப்படுகின்றது.

சங்க கால அரசியல்

•    சங்க காலத் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூன்று பேரரசர்கள் இருந்தனர்.
•    இம்மூவருக்குள்ளே ஆதிக்கப் போட்டிகளும், போர்களும் அடிக்கடி நடைபெற்று வந்தன.
•    மூவேந்தர்களுள் வலிமை பெற்றவன் அவ்வப்போது பிற வேந்தர்களை அடக்கி ஆதிக்கம் செலுத்தினான்.
•    கரிகால் சோழன் ஆட்சிக் காலத்தில் தமிழகம் முழுவதும் அவனது ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சேரன் செங்குட்டுவன் காலத்தில் தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் அம்மன்னனிடம் இருந்தது.
•    பாண்டியன் நெடுஞ்செழியன் பிற தமிழ் வேந்தர்களின் மேல் ஆதிக்கம் செலுத்தினான்.
•    மூவேந்தர்களே மட்டுமின்றிச் சில குறுநில மன்னர்களும் மலைகள் போன்ற இடத்தைப் பெற்று ஆட்சி செலுத்தி வந்தனர்.

No comments:

Post a Comment