LATEST

Thursday, January 9, 2020

பாறைகளை அரிக்கும் மற்ற காரணிகள்

பாறைகளை அரிக்கும் மற்ற காரணிகள்

ஓடும் நீர்
•    ஆறு என்பது ஓடும் நீராகும். வழக்கமான நன்னீர் உயர் நிலப் பகுதிகளில் உருவாகி ஆறு, ஏரி, கடல் அல்லது பேராழியினை நோக்கி பாய்கின்றது. ஆறானது அரித்தல் செயலில் மிகவும் முக்கியமான காரணியாக இருக்கின்றது.
•    ஆறுகள் அவற்றின் போக்கில் பாயும் போது அரித்தல், கடத்துதல் மற்றும் படிய வைத்தல் ஆகிய பணிகளை செய்கின்றன.

a. அரிப்புச் செயல்
ஆறு தன்னுடைய அரிப்பு பணியினை பல்வேறு செயல்கள் மூலமாக செய்கின்றன. அவைகளாவன,
•    நீர் தாக்கம்: நீரானது தொடர்ந்து ஓடி வரும்போது அதனுடைய தாக்கத்தால் பாறைகள் உடைபடுதலே நீர்தாக்கச் செயலாகும்.

•    அரித்துத் தின்னல்: ஆற்றுநீரின் அரைத்தலால் ஆற்றினுடைய படுகை மற்றும் அதன் கரையேராங்கள் அரித்து அடித்து செல்லப்படுகின்றன.

•    மோதி உடைத்தல்: ஆற்றினால் கடத்தப்படும் பாறைத் துகள்கள் ஆற்றுநீரில் செல்லும் போது தரையில் உருளுவதாலும் மற்றும் ஒன்றோடு ஒன்று மோதுவதாலும் பாறைத் துகள்களில் உராய்தல் மற்றும் தேய்தல் ஆகியன நடைபெறுகின்றன.

•    கரைதல்:
நீரின் இரசாயணம் அல்லது கரைக்கும் ஆற்றிலினால் பாறைகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கரைக்கப்படுவதாகும்.
 
b. ஆற்றின் கடத்தல் செயல்
ஆறுகள் கடத்தும் பணியினை பின்வரும் செயல்முறைகளில் செய்கின்றன.
•    இழுத்து செல்லல்: ஆறானது பெரும் பாறைகளையும் மற்றும் கூழாங்கற்களையும் அதனுடைய படுகையிலும் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்கின் ஓரங்களிலும் இழுத்து செல்கின்றன.

•    தாவுதல்: நடுத்தர கன அளவுள்ள சில பொருட்கள் தாவுயும் மற்றும் குதித்தும் ஆற்றுப் பள்ளத்தாக்கின் படுகையில் செல்கின்ற இச்செயலில் தாவுதல் என்கிறோம்.

•    தொங்கும் நிலை: சிறிய அளவுள்ள துகள்கள் தரையில் படாமல் தொங்கும் நிலையில் ஆற்று நீரில் கடத்தப்படுகின்றன. இந்நிலையே தொங்கும்-நிலை எனப்படுகிறது.

•    கரைதல்: உப்புக்கள் மற்றும் சுண்ணாம்பிலாலான ஒரு சில பாறைகள் நீரால் கரைக்கப்பட்டு கடத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment