LATEST

Thursday, January 9, 2020

புவி மேற்பரப்பு - வானிலைச் சிதைவு (Weathering) பகுதி 2

புவி மேற்பரப்பு வானிலைச் சிதைவு (Weathering) பகுதி 2

II. இராசயண சிதைவு (Chemical Weathering)
•    இரசாயண சிதைவானது பாறைகள் பல பகுதிகளாக சிதைவடைவதாகும் அல்லது வேதிப்பொருட்கள் மாற்றி அமைக்கப்படுவதின் காரணமாக பாறைகள் உடைபடுவதாகும்.
•    இந்த செயல்முறையில் ஆக்ஸிகரணம் மற்றும் நீரின் சேர்க்கை ஆகியன மிகவும் பொதுவான நிகழ்வுகளாகும்.
 
a. கரைதல் (Dissolution)
•    வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு அல்லது சல்பர் டை ஆக்ஸைடு அல்லது நைட்ரஜன் டை ஆக்ஸைடு மழைப்பொழிவில் கரையும் பொழுது அமிலமாக மாறுகின்றது. அவை சுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு மற்றும் பாறைகளில் சிதைவையும் ஏற்படுத்துகிறது.
•    Acid Rain –னால் தான் தாஜ்மஹால் பாதிக்கப்படுகிறது.
 
b. தாது நீர்கொள்ளல் (Mineral Hydration)
•    தாது நீர்கொள்ளல் என்பது நீர் உட்கிரகித்தலே ஆகும். இந்த வகை சிதைவானது நீர் அயனி மற்ற தாதுக்களோடு ஒன்று சேர்ந்து பாறைகளில் காணப்படுவதாகும். இந்த இணைப்பானது தாதுக்களின் கன அளவினை அதிகரிக்கவும் மற்றும் அவை இருமாற்ற அழுத்த சிதைவு ஏற்படவும் வழி வகுக்கின்றன.
 
c. நீரின் சேர்க்கை (Hydrolysis)
•    நீரின் சேர்க்கையால் சில்கேட் தாதுக்கள் பாதிப்படையும் செயலாகும்.
•    இவ்வாறான எதிர் செயல்களினால் ஹைட்ரஜன் மற்றும் ஹைட்ராக்சைடு அயனிகளால் சிலக்கேட்டுகள் களிமண்தாதுக்களாக மாற்றப்படுகின்றன.
 
d. ஆக்ஸிகரணம் (Oxidation)
•    இந்த செயல்முறையில் உலோகத்தோடு காணப்படும் பாறைகளானது ஆக்ஸிஜன் மற்றும் நீரோடு சேர்ந்து ஆக்ஸிகரணம் அடைகின்றனது. இந்த ஆக்ஸிகரணம் பாறைகளை பலவீனப் படுத்துவதோடு மட்டுமின்றி அவற்றை சிறிய துகள்களாக மாற்றியமைக்கின்றன. இந்த செயல் முறையானது துருப்பிடித்தல் எனவும் அழைக்கப்படுகிறது.
•    உயிரினச் சிதைவிற்கு பொதுவாக தாவரங்கள் மற்றும் மரங்களின் வளர்ச்சி, பல்வேறுபட்ட சுரங்கங்கள் அமைத்தல், கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் சாலைகள் அமைத்தல் ஆகியன காரணமாகின்றன.
 
III. உயிரின சிதைவு (Biological Weathering)
•    Plants and treesன் வளர்ச்சி அதிகம். பாறைகளின் சிதைவு அதிகம்.
•    Mines, Buildings, Roads, Etc.,

No comments:

Post a Comment