LATEST

Thursday, January 9, 2020

புவி மேற்பரப்பு - வானிலைச் சிதைவு (Weathering) பகுதி 1

புவி மேற்பரப்பு - வானிலைச் சிதைவு (Weathering) பகுதி 1

வானிலைச் சிதைவு (Weathering)

•    பாறைகள் உடைதல் அல்லது சிதைவடைதல் செயலே வானிலைச் சிதைவு என்கிறோம். வானிலைச் சிதைவானது பௌதீக, இரசாயண மற்றும் உயிரின செயல்முறைகளின் கூட்டு செய்கையினால் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறையானது மாற்றம் அடைவதாகும்.
•    வானிலைச் சிதைவானது பௌதீக (அல்லது உருமாற்ற), இரசாயண மற்றும் உயிரின சிதைவு என வகைப்படுத்தப்படுகிறது.
 
I. பௌதீக (அல்லது உருமாற்ற) சிதைவு (Physical or Mechanical Weatherings)
•    பௌதீக சிதைவு என்பது பாறைகள் இராசாயண மாற்றம் அடையாமல் சிதைவடைவதை குறிப்பதாகும். பௌதீக சிதைவில் முதன்மை செயல்முறையானது அரித்து தின்னல் ஆகும். பௌதீக சிதைவானது பின்வரும் செயல்முறைகளினால் நடைபெறுகின்றன.
 
a. வெப்ப அழுத்தம் (Thermal Stress)
•    பலதரப்பட்ட தாதுக்களின் கூட்டமைப்பே பாறைகளாகும். வெப்பநிலை வேறுபாட்டின் காரணமாக ஒவ்வொரு தாதுக்களும் விரிவடைகிறது மற்றும் சுருங்கிறது. இவ்வாறு பாறைகள் விரிவடைவதும், சுருங்குவதுமான செயல்கள் நீடிப்பதால் பாறைகளில் அழுத்தம் ஏற்பட்டு உடைகின்றன.
•    இந்த செயல்முறையானது வெப்ப அழுத்த சிதைவு என அழைக்கப்படுகிறது. இதன் இரண்டு முக்கிய வகைகளானது. வெப்ப அதிர்ச்சி (Thermal Shock) மற்றும் வெப்ப தணிவு (Thermal Fatigue) ஆகியவைகளாகும். பாலைவன பிரதேசங்களில் இந்த வகை சிதைவானது இயல்பாக நடைபெறுகின்றது.
 
b. உறைபனி சிதைவு (Frost Weathering)
•    உறைபனி நிலவும் மலைப்பகுதிகளில் இந்த வகை சிதைவு காணப்படுகின்றன. சில நேரங்களில் விரிசல்கள் உள்ள பாறைகளில் மழைப்பொழிவின் காரணமாக நீரானது நிரம்புகிறது.
•    இரவு நேரங்களில் நிலவும் வெப்பநிலையின் காரணமாக இந்த நீரானது உறைந்து பனிக்கட்டியாக மாறும் மற்றும் பகல் நேரங்களில் உருகும். பனிக்கட்டினாது ஒரு திடப்பொருளாக இருப்பதால் பாறைகளின் உடைப்பட்ட பகுதிகளில் அது அதிக அழுத்தத்தை உருவாக்கும், ஆதலால் பாறையின் விரிசல்கள் மேலும் அதிகரிக்கும். உறைதல் மற்றும் உருகுதல் செயல்முறையானது தொடர்ந்து நடைபெறுவதால் பாறைகள் சிறு பகுதிகளாக உடைக்கப்படுகின்றன. இந்த வகை சிதைவு உறைபனி சிதைவு எனப்படுகிறது.
 
c. உப்பு படிகங்களின் வளர்ச்சி
•    உப்புபடிகமாதலை ஹாலோஹிலாஸ்டி (Halocalasty) எனவும் அழைக்கப்படுகிறது. உடைந்த பாறைகளில் உள்ள வெடிப்பு மற்றும் இணைப்புகளின் வழியாக உட்புகும் உப்பு கலந்த நீர் ஆவியாகும் போது உப்பானது தங்கி படிகமாக மாறுகிறது.
•    பீடப்பாறையின் மேற்பரப்பு உப்பு படிகமாதலின் கராணமாக தேன் கூட்டு அமைப்பை பெறுகிறது. உதாரணம், தைவானில் அமைந்துள்ள ஏகிலு.

No comments:

Post a Comment