LATEST

Thursday, January 23, 2020

காலநிலையியல் (Climatology) - காலநிலை மண்டலங்கள் பகுதி 2

காலநிலையியல் (Climatology) - காலநிலை மண்டலங்கள் பகுதி 2

3. துணை வெப்ப மண்டலக் காலநிலை
•    இக்காலநிலை 25° முதல் 35° அட்சம் வரை வட மற்றும் தென் அரைக்கோளங்களில், நிலவுகின்றது. இம்மண்டலம் வெப்ப மண்டலத்திற்கு அப்பால் இருப்பதால் ஆண்டு முழுவதும் இங்கு சூரிய ஒளிக்கதிர்கள் சரிவாகவே விழுகின்றன. எனவே இங்கு ஆண்டு முழுவதும் குறைவான வெப்பமே நிலவுகின்றது. 
கோடைக்காலம் மித வெப்பமாகவும் குளிர்காலம் குளிராகவும் உள்ளது. ஆண்டின் ஒரு சில மாதங்களில் மட்டுமே மழைப்பொழிவு ஏற்படுகின்றது. ஆண்டின் சராசரி மழையளவு 90 செ.மீக்கு குறைவாக உள்ளது.
•    இங்கு குளிர்காலத்தில் பகல் நேரத்தை விட இரவு நேரம் அதிகமாக உள்ளது. கோடை மற்றும் குளிர்கால வெப்ப வேறுபாடும் அதிகமாகவே உள்ளது. அதேபோன்று பகல், இரவு வெப்பமாறுபாடும் அதிகமாகவே உள்ளது.
 
4. மித வெப்ப மண்டலக் காலநிலை
•    மித வெப்ப மண்டலக்காலநிலை 35 டிகிரி முதல் 60 டிகிரி அட்சம் வரை வட மற்றும் தென் அரைக்கோளங்களில் நிலவுகின்றது. சூரிய ஒளிக்கதிர்கள் கோடைக்காலத்தில் சற்று சரிவாகவும், குளிர்காத்தில் மிகச் சரிவாகவும் விழுகின்றன. எனவே கோடைக்காலம் குளிராகவும், குளிர்காலம் மிகக்குளிராகவும் உள்ளது. கோடை மற்றும் குளிர்கால வெப்ப வேறுபாடும் அதிகமாகவே உள்ளது.
•    கோடைக்காலத்தில் பகல் நேரம் இரவு நேரத்தைவிட அதிகமாக உள்ளது. இங்கு குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே மழை பெய்கின்றது. ஆண்டின் சராசரி மழையளவு 75 செ.மீ ஆகும்.
 
5. துணை துருவ மண்டலக் காலநிலை
•    துணை துருவ மண்டலக் காலநிலை 60° முதல் 70° அட்சம் வரை வட மற்றும் தென் அரைக்கோளங்களில் நிலவுகின்றது. சூரியனின் ஒளிக்கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகச் சரிவாக விழுவதால் இங்கு வெப்பம் குறைவாகவே உள்ளது.
 
6. துருவ மண்டலக் காலநிலை
•    துருவ மற்றும் காலநிலை 70 டிகிரி முதல் 90 டிகிரி வரை வட மற்றும் தென் அரைக்கோளங்களில் நிலவுகின்றது. இங்கு ஆண்டு முழுவதும் உறைநிலக்கு கீழ் வெப்பநிலை நிலவுகின்றது.
•    சூரியன் தென் அரைக்கோளத்தில் பிரகாசிக்கும்பொழுது வடதுருவப்பகுதியில் ஆறு மாதங்களுக்குச் சூரிய உதயமே ஏற்படுவதில்லை. அதுபோலவே சூரியன் வட அரைக்கோளத்தில் பிரகாசிக்கும் பொழுது தென்துருவப் பகுதியில் ஆறு மாதங்களுக்கு சூரியனே காணப்படுவதில்லை.
•    கோடைக்காலத்தில் இங்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் நாள் முழுவதும் பிரகாசிப்பதால் இரவு, பகல் இரண்டு நேரங்களிலும் வெளிச்சமாகவே உள்ளது. அதனால் கோடைக்காலத்தில் இரவு என்பதே இல்லை. குளிர்காலத்தில் இங்கு சூரியன் தெரிவதே இல்லை. அதனால் பகலில் கூட வெளிச்சம் இன்றி இரவாகவே இருக்கும்.

No comments:

Post a Comment