LATEST

Thursday, January 23, 2020

காலநிலையியல் (Climatology) - ஈரப்பதம்

ஈரப்பதம்

•    காற்றில் உள்ள நீராவியின் அளவையே ஈரப்பதம் எனக் குறிப்பிடுகின்றோம்.
•    ஓப்பு ஈரப்பதம் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள காற்றின் நீராவியின் அளவிற்கும், அதே வெப்பநிலையில் காற்று ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்ச அளவு நீராவியின் அளவிற்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்.
 
காற்றின் பூரித நிலை:
•    காற்று ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்ச அளவு ஈரப்பதத்தை பெற்றிருக்கும்பொழுது அக்காற்று பூரித நிலையில் உள்ளது எனப்பொருள். பூரிய நிலையில் உள்ள காற்றின் ஒப்பு ஈரப்பதம் 100% ஆகும்.
•    காற்று எந்த வெப்பநிலையில் பூரித நிலையை அடைகின்றதோ அதனைப் "பனிவிழுநிலை" என்கின்றோம். இந்நிலையில் மேற்கொண்டு நீராவியை ஏற்றுக்கொள்ளும் காற்று இரு வகைகளில் பூரித நிலையை அடையும்.
1. காற்றில் நீராவியின் அளவு அதிகரிக்கும் பொழுது
2. காற்றின் வெப்பநிலை குறையும்பொழுது
•    காற்றிலுள்ள நீராவி நீர்த்துளிகளாக மற்றும் நிகழ்வையே நீராவி சுருங்குதல் என்றழைக்கின்றோம். காற்றிலுள்ள வெப்பநிலை 0 டிகிரிக்கு அதிகமாக இருக்கும் பொழுது, நீராவி நீர்த்துளிகளாக சுருங்குகின்றது. ஆனால் காற்றின் வெப்பநிலை 0 டிகிரிக்கு குறையும்பொழுது நீராவி பனித்துளிகளாக சுருங்குகின்றது.
•    மேகம் என்பது வளிமண்டலத்தின் வெவ்வேறு உயரங்களில் நீராவி சுருங்குவதால் ஏற்பட்ட நுண்ணிய நீர்த்திவலைகள் அல்லது பனித்துகள்கள் சேர்ந்த ஒரு தொகுதியாகும்.
•    புவியின் மேற்பரப்பில் உள்ள காற்று நீராவியை உறிஞ்சிக் கொள்கிறது. பகல் நேரங்களில் புவியின் மேற்பரப்பு வெப்பப்படுத்தப்படுவதால், இக்காற்றும் வெப்பப்படுத்தப்படுகிறது. எனவே இக்காற்று விரிவடைந்து இலேசாகி உயரே எழும்புகின்றது. இவ்வாறு மேலேழும்புப் காற்று குளிர்வடைந்து பூரித நிலையை அடைகின்றது. இவ்வாறாக நீராவி சுருங்கி மேகங்கள் உருவாகின்றன. நீராவி சுருங்குதல் வெவ்வேறு உயரங்களில் நடைபெறுவதால் மேகங்களும் வெவ்வேறு உயரங்களில் தோன்றுகின்றன.
•    மேகங்களை அவை உருவாகும் உயரத்திற்கேற்ப 4 பிரிவுகளாக பிரிக்கின்றோம்.
1. கீழ் மட்ட மேகங்கள்
2. இடைமட்ட மேகங்கள்
3. உயர்மட்ட மேகங்கள்
4. செங்குத்து மேகங்கள்

நீராவி சுருங்குதலின் பல்வேறு வகைகள்:

மேகங்களைத் தவிர மேலும் பல வகைகளில் நீராவி சுருங்குதல் நடைபெறுகின்றது.
 
நீர்ப்பனித்துளி (Dew):
•    காற்றிலுள்ள நீராவியானது, குளிர்ந்த மேற்பரப்புகளான கற்கள், புற்கள் மற்றும் இலைகளின் மீது பனித்துளியாகப் படிகின்றது. பனிவிழு நிலை, உறைநிலைக்கு அதிகமாக இருக்கும்பொழுது பனித்துளி உருவாகின்றது.
 
வெண்பனி(White Frost)
•    உயரமான இடங்களில் குளிர்காலங்களில் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் இருக்கும். அதனால் காற்றில் உள்ள நீராவி புற்கள், இலைகள் போன்றவற்றில் சிறிய பனிப்பாகங்களாகப் படியும். இதனையே வெண்பனி என குறிப்பிடுகின்றோம். வெண்பனி ஏற்பட்டால் தாவரங்கள் கருகிவிடும்.
 
அடர்ந்த பனிமூட்டம் (Fog):
•    தரையை ஒட்டி நீராவி சுருங்குவதையே அடர்ந்த பனிமூட்டம் என்கிறோம். அடர்ந்த பனிமூட்டத்தைத் தரையை ஒட்டி உருவான மேகங்கள் எனக்கூட அழைக்கலாம். அடர்ந்த பனிமூட்டத்தின் போது அருகிலுள்ள பொருள்கள் கூட சரியாகத் தெரியாது.
 
பனிமூட்டம் (Mist)
•    அடர்ந்த பனி மூட்டத்தை விட அடர்த்திக் குறைவானதை பனிமூட்டம் என அழைக்கின்றோம். பனிமூட்டம் ஏற்படும் பொழுது தூரத்திலுள்ள பொருட்கள் தெரியாது.
 
மழைப்பொழிவு(Rainfall)
•    நீராவி குளிர்ந்து நீர்த்திவலைகளாக மாறுகின்றன. நீர்த்திவலைகள் காற்றிலுள்ள தூசுகளின் மீது படிந்து மேகங்களாக உருவாகின்றன. இந்த நீர்த்திவலைகள் அளவில் மிகச்சிறயவை. எனவே இவை காற்றில் மிதந்து கொண்டிருக்கும். 
•    நீராவி சுருங்குதல் தொடர்ந்து நடைபெறும்பொழுது மேலும் அதிக எண்ணிக்கையயில் நீர்த்திவலைகள் உருவாகின்றன. இச்சூழலில் நீர்த்திவலைகள் அதிகரித்து ஒன்று கூடி பெரிய நீர்;த்துளிகளாக மாறுகின்றன. இதனால் நீர்த்துளியின் எடை கூடுகின்றது. எனவே இவை காற்றில் மிதக்க முடிவதில்லை. 
•    எனவே மழைத்துளிகளாக புவியை நோக்கி விழுகின்றன. இவ்வாறு வளிமண்டலத்திலிருந்து நீர்த்துளிகள் விழுவதையே மழைப்பொழிவு என்கிறோம்.

No comments:

Post a Comment