மழையின் வகைகள்
• நீராவி சுருங்குதலுக்கும், அதனைத் தொடர்ந்து ஏற்படும் மழைப்பொழிவிற்கு, ஈரப்பதமுள்ள காற்று உயர்வது மிகவும் அவசியம். காற்று மூன்று முறைகளில் உயரே எழும்புகின்றது. இதன் அடிப்படையில் மழை 3 வகைப்படும் அவையாவன:
1. வெப்ப சலன மழை
2. மலைத் தடுப்பு மழை
3. புயல் மழை
1. வெப்ப சலன மழை
2. மலைத் தடுப்பு மழை
3. புயல் மழை
1. வெப்ப சலன மலை(Canvectional Rainfall)
• கோடைக்காலத்தில் பகல் நேரங்களில் புவியின் மேற்பரப்பு அதிகமாக வெப்பமாகிறது. எனவே அங்குள்ள காற்றும் அதிகமாக வெப்பமடைந்து, விரிவடைந்து உயர்கின்றது. ஒரு குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் காற்று குளிர்வதால் பூரித நிலையை அடைகின்றது. அதனால் நீராவி சுருங்குதல் ஏற்பட்டு மழைப்பொழிவு நிகழ்கின்றது.
• எனவே அதிக வெப்பத்தினால் வெப்பப்படும் காற்று விரைவாக உயரே எழும்புவதால் குளிர்ந்து மழையைத் தருவதால் இதனை வெப்பச் சலன மழை என்கின்றோம். புவியின் மேற்பரப்பில் பெய்யும் மழையில் மிக அதிக அளவு வெப்பச் சலன மழையின மூலமாகவே கிடைக்கின்றது.

2. மலைத்தடுப்பு மழை (Orographic rainfall):
• உயரமான மலை மற்றும் மலைத்தொடர்களில் வீசும் காற்று தடுக்கப்படும் பொழுது, மலைச்சரிவுகளின் உயரே தடுக்கப்பட்ட காற்று எழும்புகின்றது. மேலெழும்பும் இக்காற்று குளிர்கின்றது. இதனால் இக்காற்று பூரித நிலையை அடைந்து மழைப்பொழிவு ஏற்படுகின்றது. இதனை நாம் மலைத்தடுப்பு மழை என்கின்றோம்.
• மலைகளில் காற்று மோதும் சரிவில், காற்று மேலெழும்பும்போது அச்சரிவில் அதிக மழையைக் கொடுக்கிறது. காற்றிலுள்ள நீராவி மழையாக மாறிய பின்னும் காற்று ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாகி விடுகின்றது. வறண்ட இக்காற்று மலையின் மறுசரிவில் கீழ்நோக்கி இறங்குகிறது. இக்காற்று வறண்ட காற்றாக இருப்பதால் மறுசரிவுப் பகுதிக்கு மழையைத் தருவதில்லை. மழையைப் பெறாத மலையின் மறுசரிவுப் பகுதியை "மழை மறைவுப் பிரதேசம்" என அழைப்பர்.

• புவியின் மேற்பரப்பில், வெப்பம் அதிகமான இடத்தில் உள்ள காற்று வெப்பமடைந்து விரிவடைந்து இலேசாகி உயரே செல்கிறது. இதனால் வெப்பமான இடத்தில் குறைந்த அழுத்த மையம் உருவாகிறது.
• குறைந்த அழுத்த மையத்தைச் சுற்றி வெளியே செல்லச் செல்ல அழுத்தம் மையத்தின் வெளியிலுள்ள அதிக அழுத்தத்தில் இருந்து காற்று குறைவழுத்த மையத்தை நோக்கி வீசுகிறது. மையத்தில் அழுத்தம் குறையக் குறைய காற்றின் வேகம் அதிகரிக்கிறது.
• வெகுவேகமாக வீசும் காற்று புவியின் சுழற்சியால் திசை திருப்பப்பட்டு வட்ட வடிவ சுழல்களாக, குறைந்த அழுத்த மையத்தை நோக்கி வீசுகிறது. மையத்தில் குவிந்த காற்று புனல் வடிவில் மேலே உயருகிறது. இதனைப் புயல் காற்று என்கிறோம். மேலே உயர்ந்து செல்லும் காற்று குளிர்ந்து மழையைத் தருவதால் இதனைப் புயல்மழை என்பர்.
• வளிமண்டலத்தில் நிலவும் வெப்பநிலை 0° ஊக்குக் குறைவாக இருக்கும்பொழுது காற்றிலுள்ள நீராவி குளிர்ந்து நீராக மாறாமல் பனித்துகள்களாக மாறுகிறது. பனித்துகள்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பனி மழையாகப் பொழிகின்றது. மிதவெப்ப மண்டலத்தில் குளிர்காலத்தில் பெய்யும் மழைப்பொழிவு பெரும்பாலும் பனிமழையாகவே இருக்கும்.• ஆலங்கட்டி அல்லது கல்மாரி தோன்றுவதற்குக் காரணம் கோடைப்பருவத்தில் நிலவும் அதிக வெப்பநிலையே கோடை பருவத்தில் பிற்பகல் வேளைகளில் நிலப்பரப்பு மிக அதிக வெப்பமடைகின்றது. அங்குள்ள காற்றும் மிக அதிகமாக வெப்பப்படுத்தப்படுவதால் அடர்த்தி குறைந்து மிக வேகமாக வளிமண்டலத்தில் மிக அதிக உயரத்திற்குச் செல்கிறது. வளிமண்டலத்தில் அதிக உயரத்தில் காற்றின் வெப்பநிலை 0° டிகிரிக்கு மிகக்குறைவாக இருப்பதால் நீராவி நீர்த்துளிகளாக மாறாமல் நேரடியாக பனிக்கட்டியாக மாறுகின்றன. இப்பனிக்கட்டிகள் பனிக்கட்டி மழையாகப் பெய்கின்றன.

No comments:
Post a Comment