LATEST

Thursday, January 23, 2020

பேராழியியல் (Oceanography) - பேராழிகளில் உருவாகும் நீரோட்டங்களை பாதிக்கும் காரணிகள்

பேராழிகளில் உருவாகும் நீரோட்டங்களை பாதிக்கும் காரணிகள்

பேராழிகளில் உருவாகும் நீரோட்டங்களை பாதிக்கும் காரணிகள்:
•    வெப்பநிலையில் வேறுபாடு
•    பேராழி நீரின் அடர்த்த (உவர்ப்பியம்).
•    காற்று மற்றும் வளிமண்டல அழுத்தம்
•    கோரியாலிஸிஸ் விசை
•    புவியீர்ப்பு விசை
•    மழை வீழ்ச்சி மற்றும் ஆவியாதல் மற்றும்
•    பனி உருகுதல்

பேராழி நீரோட்டங்கள் இருவகைப்படும். அவையாவன
a. மேற்பரப்பு நீரோட்டம்
b. ஆழ்கடல் நீரோட்டம்
 
a. மேற்பரப்பு நீரோட்டம்:
•    புவிப்பரப்பின் மீது கோள் காற்றுகள் தொடர்ந்து நீடிக்கும் இயல்புக் கொண்டவை. ஆதலால் இக்காற்றுகள் பெருங்கடல் பரப்புகளின் மீது நிலையான நீரோட்டங்களை உருவாக்குகின்றன. கோள் காற்றுகளைப் போலவே கொரியோலிஸ் விசையினால் (Coriolis) மேற்பரப்பு நீரோட்டங்கள் வட அரைக்கோளத்தில் கடல்நீர் காற்றுவீசும் திசைக்கு வலதுபுறம் திருப்பப்படுகிறது. நிகரவிளைவாக மேற்பரப்பு நீரோட்டங்கள், காற்றுவீசும் திசைக்கு 45டிகிரி கோணத்தில் நகருகின்றன.
•    உலகளவில் பெருங்கடல்களை சூழ்ந்துள்ள நிலப்பரப்புகள் அந்நீரோட்டங்களுக்கு முட்டுக்கட்டையான இருக்கின்றன. எனவே, மேற்பரப்பு நீரோட்டங்கள் ஒரு வட்டவடிவில் முழுமையான வளர்ச்சியை பெறுகின்றன. அத்தகைய வளர்ச்சிக்கு பெருங்கடல்களின் எல்லைகளாக அமைந்துள்ள கண்டப் பெருங்கடல்களின் எல்லைகளாக அமைந்துள்ள கண்டப்பரப்புகளே காரணமாக இருக்கின்றன.
•    வட்டவடிவில் உருவாகிற மேற்பரப்பு நீரோட்டமே சுழல் என அழைக்கப்படுகிறது.
 
ஒரு சுழலின் அமைப்பு:
•    ஒரு சுழலின் நான்கு வகையான நீரோட்டப்பாதை உள்ளன. ஆவை இரண்டிரண்டாக இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. அவையாவன
i. வடக்கு-தெற்காக கண்ட எல்லைகளுக்கு இணைய பாய்கிற இரண்டு எல்லை நீரோட்டங்கள். மற்றும்
ii. கிழக்கு-மேற்காக பாய்கிற இரண்டு எல்லை நீரோட்டங்கள்
இதிலுள்ள இரண்டு நீரோட்டங்களும் முறையே சுழலின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் பாய்கின்றன. அட்சக்கோடுகளுக்கு இடையே வெப்ப ஆற்றலை பரப்புவதில் எல்லை நீரோட்டங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. துணை வெப்பமண்டல சுழல் ஒன்றை எடுத்துக்காட்டாக கொண்டு நீரோட்டங்களின் இயக்கங்களை புரிந்துக் கொள்ளலாம்.
 
துணை வெப்பமண்டல சுழல்:
•    துணை வெப்ப மண்டல பகுதியில் 300 வட மற்றும் தென் அட்சக்கோடுகளில் அமைந்துள்ள பெருங்கடல்கள் ஒவ்வொன்றிலும் பெரிய அளவில் ஒரு சுழல் அமைந்துள்ளது. இச்சுழல்களில் காணப்படும் நீரோட்டங்கள், துணை வெப்பமண்டல உயரழுத்த தொகுதிகளினால் தோன்றுகிற வளிமண்டல கோள் காற்றினால் முன்நோக்கி நகர்த்தப்படுகின்றன.

No comments:

Post a Comment