பேராழி நீரோட்டங்களின் வகைகள் பகுதி 1
மேற்கு எல்லை நீரோட்டங்கள்:
• நிலநடுக்கோட்டிலிருந்து உயர் அட்சங்களை நோக்கி பாய்கிற நீரோட்டங்கள் மேற்கு எல்லை நீரோட்டங்களாகும். பொதுவாக இந்த நீரோட்டங்கள் அனைத்தும் நாளென்றுக்கு 40-120கி.மீ. வரை ஜெட் போன்று பீறிட்டுப் பாய்பவை.
• மேற்பரப்பு நீரோட்டங்களில் மேற்கு எல்லை நீரோட்டங்கள் மிக ஆழத்தில் செல்லக்கூடிய நீரோட்டங்களாகும். இவை பெருங்கடல் பரப்பிற்கு கீழே சுமார் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை விரிவடைகின்றன. இத்தகையை வெப்ப நீரோட்டங்கள் அவற்றின் அமைவிடத்தைப் பொறுத்து சிறப்பான பெயர்களை கொண்டுள்ளன.
1. வட அட்லாண்டிக் - கல்ஃப் நீரோட்டம்
2. வடபசிபிக் - கியூரோஷியோ
3. தென் அட்லாண்டிக் - பிரேசில்
4. தென் பசிபிக் - கிழக்கு ஆஸ்திரிலேயா
5. இந்தியப் பெருங்கடல் - அகுல்ஹால் நீரோட்டம்.

கிழக்கு எல்லை நீரோட்டங்கள்:
• உயர் அட்சத்திலிருந்து நில நடுக்கோட்டை நோக்கி பாய்கிற நீரோட்டங்கள் கிழக்கு எல்லை நீரோட்டங்கள் ஆகும். கிழக்கு எல்லை நீரோட்டங்கள் அகலமானவை, ஆழமற்ற பகுதியில் நாளொன்றுக்கு மூன்றிலிருந்து ஏழு கி.மீட்டர் வேகத்தில் பாய்கின்றன. இந்த குளிர் நீரோட்டங்கள் அவற்றின் அமைவிடத்தைப் பொறுத்து சிறப்பான பெயர்களை கொண்டுள்ளன.
1. வட அட்லாண்டிக் - கானரி
2. வட பசிபிக் - சலி போர்னியா
3. தென் அட்லாண்டிக் - பெரு
4. தென் பசிபிக் - பெரு
5. இந்தியப் பெருங்கடல் -மேற்கு ஆஸ்திரேலிய நீரோட்டம்

கிழக்கு - மேற்கு நீரோட்டங்கள்:
• வட அரைகோளத்தில், மேற்கு எல்லை நீரோட்டங்கள் சுமந்து வருகிற நீரை கிழக்கு நோக்கிப் பாய்கிற வடபசிபிக் நீரோட்டமும், வட அட்லாண்டிக் நீர்பிரிவும், கிழக்கு எல்லை நீரோட்டங்கள் துவங்குகிற இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன. அதுபோலவே, தென் அரைகோளத்தில் கிழக்கு எல்லை நீரோட்டங்கள் சுமந்து வருகிற நீரை தென் பசிபிக் நீரோட்டமும், தென் இந்திய நீரோட்டமும் தென் அட்லாண்டிக் நீரோட்டமும் மேற்கு எல்லை நீரோட்டங்கள் துவங்குகிற இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன.
• வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் 50டிகிரி வடக்கில் சிறிய சுழல்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் காணப்படும் நீரோட்டங்கள், துருவ தாழ் அழுத்த மையத்தினால் உருவாகிற காற்று சுழற்சியினால் ஏற்படுகின்றன. இவ்வாறான சுழல்கள் தென் அரைக்கோளத்தில் வளர்ச்சிப் பெறுவதில்லை. ஏனெனில் அப்பகுதியில் பாய்கிற நீரோட்டங்களை தடுத்து அவற்றின் திசையை திருப்பும் அளவிற்கு நிலப்பரப்புகள் பெரிதாக அமையவில்லை.

No comments:
Post a Comment