பேராழி நீரோட்டங்களின் வகைகள் பகுதி 2
b. ஆழ்கடல் நீரோட்டங்கள்:
• உலகிலுள்ள பெருங்கடல்களில் அதன் மேற்பரப்புக்குக் கீழேயும் நீரோட்டங்கள் பாய்கின்றன. ஆழ்கடல் நீரோட்டங்கள் கடல் நீரின் அடர்த்தி வேறுபாடுகளினால் இயக்கப்படுகின்றன.
• பெருங்கடல்களின் வெப்பநிலையும் உப்பளவும் மாறுபடுவதால் அந்நீரின் அடர்த்தி வேறுபடுகிறது. உயர் அட்ச கோடுகளில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவுவதால் அங்கு கடல்நீரின் அடர்த்த அதிகமாக இருக்கும். இதனால் அங்கு கடல்நீர் மிகவும் குளிர்ந்து ஆழ்கடல் அகழிகளை நோக்கிக் கீழிறங்குகிறது. இவ்வாறு கீழிறங்குகிற குளிர்நீரையே ஆழ்கடல் நீரோட்டம் என அழைக்கிறோம்.
• இந்நீரோட்டங்களே பெருங்கடலிலுள்ள நீரில் 90% நீரை ஆக்கிரமித்து உள்ளன. ஆழ்கடல் நீரோட்டங்கள் கொரியோலிஸ் விசையினால் பாதிப்படைவதில்லை.
• பொதுவாக, மேற்பரப்பு நீரோட்டடங்களுடன் ஒப்பிடும்பொழுது ஆழ்கடல் நீரோட்டங்கள் மிக மெதுவாகவே ஓடுகின்றன. இதைத் தவிர பெருங்கடல் தரையில் காணப்படுகிற நிலவெளித் தோற்றங்காளன தொடர்களும், பள்ளங்களும் ஆழ்கடல் நீர் ஓட்டத்தைத் தாமதப்படுத்துகின்றன.
பவளத்தொடர்கள்
• தனித்துக் காணப்படும் பவள உயிரினங்கள் பாலிப்புகள் என அழைக்கப்படுகின்றன. இப்பாலிப்புகளின் கூட்டமே பவளம் எனப்படுகிறது. இவ்வியிரினங்களும், மணலும் சேறும் சேர்ந்து பவளத்தொடர்கள் உருவாகின்றன. அரண் பவளத்தொடர்கள் வளருகிற இடங்களை பொறுத்து அவை கண்ட திட்டு விளிம்புகளில் நாடாதொடர் எனவும், கண்ட சரிவுகளில் மேடை தொடர் எனவும், கண்ட தீவுகள் அல்லது முதன்மை கண்ட பகுதிகளையொட்டி விளிம்புதொடர் எனவும் அழைக்கப்படுகின்றன.
• வெப்ப மற்றும் துணை வெப்ப மண்டல பெருங்கடலின் நீர்பரப்பில், பவளதொடர்கள் செறிந்துக் காணப்படுகின்றன. பெரும்பாலான பவளயினங்களுக்கு 18டிகிரி முதல் 30டிகிரி வரை வெப்பநிலை தேவைப்படுகிறது.

பவளங்களின் பரவல்:
• வெப்ப மண்டலத்திலிருந்து துருவ மண்டலம் வரை உலகிலுள்ள பெருங்கடல்களில் எல்லாம் பவளங்கள் பல வகைகளில் காணப்படுகின்றன. மேற்கு அட்லாண்டிக் மற்றும் இந்திய-பசிபிக் பெருங்கடல்களின் வெப்ப, துணை வெப்பப்பகுதிகளில் பவள தொடர்களை கட்டுவிக்கிற பவளங்கள் சிதறி காணப்படுகின்றன. பொதுவாக, 30டிகிரி வட மற்றும் 30 டிகிரி தென் அட்சக்கோடுகளுக்கு இடையே காணப்படுகிறது.

No comments:
Post a Comment