வள ஆதாரங்களும் பொருளாதார நடவடிக்கைகளும்
தொழில்களை – பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் பின்வருமாறு பிரிக்கபடுகிறது.
a. முதல் நிலைத் தொழில்கள்
b. இரண்டாம் நிலைத் தொழில்கள்
c. மூன்றாம் நிலைத் தொழில்கள்
d. நான்காம் நிலைத் தொழில்கள்
e. ஐந்தாம் நிலைத் தொழில்கள்
a. முதல் நிலைத் தொழில்கள்
b. இரண்டாம் நிலைத் தொழில்கள்
c. மூன்றாம் நிலைத் தொழில்கள்
d. நான்காம் நிலைத் தொழில்கள்
e. ஐந்தாம் நிலைத் தொழில்கள்
a. முதல் நிலைத் தொழில்கள்
• இம்முதல்நிலைத் தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து இவற்றை செயல்படுகின்றனர். இவற்றை பழமையான தொழில் நடவடிக்கை எனலாம்.
• உணவு சேகரித்தல், விலங்குகளை வேட்டையாடுதல், கால்நடைகளை மேய்த்தல், கனிமங்களை வெட்டியெடுத்தல், மீன்பிடித்தல், மரம்வெட்டுதல், வேளாண்மை இவையானைத்தும் முதல்நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.
• இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை "சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்" (Red collar Workers) என்று அழைக்கப்படுகின்றோம்.
b. இரண்டாம் நிலைத் தொழில்கள்
• மனிதர்கள் மூலப்பொருட்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர்.
• கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை, இரும்பு தாதுவிலிருந்து கிடைக்கும் இரும்பு, எஃகு போன்றவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
• இந்த உற்பத்தி செயல்கள் இரண்டாம் நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகிறது.
• இரண்டாம் நிலைத் தொழில்புரியும் பணியாள்கள் ‘நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்’ (Blue Collar Workers) என அழைக்கப்படுகின்றனர்.
c. மூன்றாம் நிலைத் தொழில்கள்
• இரண்டாம்நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுததும் வணிகம், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு சேவைகளை மூன்றாம் நிலைத் தொழில்கள் என அழைக்கப்படுகின்றன.
• தொழில் நுட்பத்தில் சிறப்பு மிக்க தொழில் நுட்ப பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
• மூன்றாம் நிலைத் தொழில்களில் பணிபுரிவோரை ‘வெளிர்சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்’ (Pink Collar Workers) என்று அழைக்கிறோம்.
d. நான்காம் நிலைத் தொழில்கள்
• கல்வித்துறை, மருத்துவம், பொழுதுபோக்கு, கேளிக்கைகள், நிர்வாகம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகிய தனித்தன்மை கொண்ட சூழல்களில் சேவை புரிவோர் நான்காம்நிலைத் தொழில்களில் அடங்குவர்.
• இத்துறையில் பணிபுரியும் பணியாளர்கள் "வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்" (White Collar Workers) என்றழைக்கப்படுவர். இத்தொழில்கள் பொதுவாக நகரங்களில் அதிகமாக காணப்படும்.
e. ஐந்தாம் நிலைத் தொழில்கள்
• ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டம் வகுப்போர் போன்ற உயர்நிலையில் உள்ளோர் இவ்வகைத் தொழிலில் அடங்குவர். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தீர்மானிக்கும் திறன் கொண்ட அறிவுரை வழங்குவோரும் சட்டபூர்வமான அதிகாரிகளும் ஐந்தாம் நிலைத்தொழிகளில் அடங்குவர்.
• இவர்கள் "தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்" (Gold Collar Wokers) என அழைக்கப்படுவர். இந்நிலைத் தொழிலாளர்கள் பெருநகரங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றனர்.
• வளர்ந்து வரும் நாடுகளில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத் தொழில்களிலும் மக்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment