புதுபிக்கக் கூடிய வள ஆதாரங்கள் (Renewable Resources)
புதுபிக்கக் கூடிய வள ஆதாரங்கள் (Renewable Resources)
• புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்கள் அதிகமாக காணப்படுவதுடன் தொடர்ந்து இயற்கையாகவே புதுப்பிக்கப்படுகிறது. இந்த வளங்களை நாம் பயன்படுத்திக்கொண்டே இருந்தாலும், கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டு .காற்றாற்றல்.
• புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்கள் அதிகமாக காணப்படுவதுடன் தொடர்ந்து இயற்கையாகவே புதுப்பிக்கப்படுகிறது. இந்த வளங்களை நாம் பயன்படுத்திக்கொண்டே இருந்தாலும், கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. எடுத்துக்காட்டு .காற்றாற்றல்.
a. நீர் மின் சக்தி(Hydro Electric Power)
• நீர் மின்சக்தி என்பது புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்களுள் மிக வளர்ச்சியடைந்த வளமாகும்.
• இது நீர் வாழும் பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் மிகப்பெரிய ஆறுகள் அதிகமாக உள்ள பகுதிகளில் நீர் மின் சக்தி அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
• சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் "முப்பள்ளத்தாக்கு அணையில்" உலகின் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது.
• இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின் சக்தி நிலையம் பக்ராநங்கல் அணையில் உள்ளது.
b. சூரிய ஆற்றல் (Solar Power)
• சூரிய ஆற்றல் வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டிடங்களில் நீர் சூடாக்குதல் போன்ற பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒளிமின் வோல்டா மின்கலம் (Photo voltaic Cells) சூரிய சக்தியை சேமிப்பதற்கு தேவைப்படுகிறது.
• உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும்நாடு ஜெர்மனி ஆகும்.
c. காற்று ஆற்றல் (Wind Power)
• காற்று வேகமாக தொடர்ந்து வீசும் பகுதிகளில் காற்றாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. விசைபொறி உருளை (Turbine) மிகவும் பயன்படுகிறது.
• ஐரோப்பிய கண்டம் காற்று ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்துகிறது.
• டென்மார்க்கின் 20% மின்சாரம் காற்று ஆற்றல் மூலமாகப் பெறப்படுகிறது.
• இந்தியாவில் மகாராட்டிரம் மற்றும் தமிழ்நாட்டில் காற்று ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.
• உலகின் மிகப் பெரிய காற்றலை – ஆரல்வாய்மொழி
d. உயிரி ஆற்றல் (Bio Mass)
• மரங்கள், பயிர்கள், வேளாண் மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்கள் உயிரி ஆற்றலுக்கு முக்கிய ஆதாரமாகத் திகழ்கின்றன.
• இவ்வனைத்து ஆதாரங்களில் மர எரிபொருளே (விறகு) வளரும் நாடுகளில் மிகை முக்கியமாகத் திகழ்கிறது. எரிவாயு அல்லது மீத்தேன் மாட்டுச் சாணத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
• தற்பொழுது உயிரி எரிபொருள் கரும்பிலிருந்தும், ஆமணக்கு வகை தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment