LATEST

Thursday, January 23, 2020

வள ஆதாரங்கள் (Resources) - புதுப்பிக்க இயலாத வள ஆதாரங்கள் (Non Renewable Resources)

புதுப்பிக்க இயலாத வள ஆதாரங்கள் (Non Renewable Resources)

புதுப்பிக்க இயலாத வள ஆதாரங்கள் (Non Renewable Resources)

•    புதுப்பிக்க இயலாத வள ஆதாரங்கள் வற்றக்கூடிய (தீர்ந்து போகக்கூடிய) வள ஆதாரங்கள் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இவ்வளங்களின் இருப்பு நிர்ணயிக்கப்பட்டவை ஆகும்.
•    இயற்கையில் இவ்வளங்கள் உருவாக எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட வேகமாக நம்மால் அவ்வளங்கள் நுகரப்படுகின்றன. 
•    எடுத்துக்காட்டாக, புவியின் கனிம சுரங்களிலிருந்து ஒரு முறை எடுக்கப்பட்ட கனிமவளங்கள் எடுக்கப்பட்டவையே. அவற்றை மீண்டும் நம்மால் உருவாக்காவோ அல்லது திரும்பப்பெறவோ இயலாது.

a. நிலக்கரி

•    நிலக்கரி பல மில்லியன் வருடங்களாக உருவான கனிமம் ஆகும். எனவே இது "புதை எரிபொருள்" (Fossil Fuel) என அழைக்கப்படுகிறது.
•    புவி அமைப்பில் ஏற்பட்ட மாறுதல்களினால் மிகப்பெரிய காடுகள் படிவுப் படுகைகளில் புதைந்து போயின. காலப்போக்கில் புவியின் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக புதைந்து போன தாவரங்கள் நிலக்கரியாக மாற்றம் அடைந்தன.
•    உலகின் மிக முக்கியமான நிலக்கரி வயல்கள் அமெரிக்கா, இரஷ்யா, ஜெர்மனி, ஐக்கிய அரசு போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
•    ஆசியாவின் முக்கிய நிலக்கரி வயல்கள் சீனா மற்றும் இந்தியாவில் உள்ளது.
 
b. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு
•    பொதுவாக எண்ணெய் கடலுக்கடியிலுள்ள படிவுப்பாறைகளான சேற்று மண்படிவுகள் (Mudstone) மென்களிகல் (Shale) மற்றும் மணற்பாறை(Sand) போன்ற அடுக்குகளில் காணப்படும்.
•    புவியின் அடியில் புதைந்துள்ள தாவரம் மற்றும் சுண்ணாம்பு ஓடு விலங்குளின் படிமங்கள் புவியின் வெப்பம் மற்றும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இவை எண்ணெயாக மாறி பாறை இடுக்குகளிலும் பாறைத்துளிகளிலும் காணப்படுகிறது. இந்த எண்ணெய் அடுக்கிற்குமேல் லேசான ஹைட்ரோ கார்பன் இயற்கை வாயு வடிவில் காணப்படுகிறது.
•    எண்ணெய் படிவுகள் நிலப்பகுதிகளிலும்(Onshere), கடல் பகுதிகளிலும் (Offshaere) காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்: தென்மேற்கு ஆசியாவின் நிலப்பகுதிகளில் காணப்படும் எண்ணெய் வயல்கள் மற்றும் வட கடலின் கண்டத்திட்டு பகுதிகளின் காணப்படும் எண்ணெய் வயல்கள்.
 
c. அணுசக்திக் கனிமங்கள்
•    யுரேனியம், தோரியம் போன்ற கனிமங்கள் அணுசக்தியை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றது. நமீபயா, கஜகஸ்தான் மற்றும் கனடா போன்ற நாடுகளில் யுரேனியம் அதிக அளவில் காணப்படுகிறது.
•     இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரள கடற்கரை மணற்பரப்புகளில் இல்மனைட் அதிகளவு காணப்படுகிறது.
•    உலகிலேயே அதிகளவு (30) அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா ஐக்கிய நாடு ஆகும்.
•    அணுசக்தி எரிபொருள் அதிகளவில் (75சதவீதம்) பயன்படுத்தும் நாடு பிரான்சு ஆகும்.

No comments:

Post a Comment