LATEST

Tuesday, January 7, 2020

TNPSC புவி அமைப்பு(Geomorphology) - பூமியின் இயக்க சக்திகள் பகுதி 3

 பூமியின் இயக்க சக்திகள் பகுதி 3

b. எரிமலைகள்
•    பூமியின் உட்பகுதியிலிருந்து வெப்பமான பாறைக்குழம்பை ஒரு திறப்பு அல்லது துளை வழியே பூமியின் மேற்பரப்பின் மீது படியவைப்பதை எரிமலை என்கிறோம். அவ்வாறு உமிழும் பாறைக்குழம்பு லாவா என அழைக்கப்படுகிறது.
•    பூமியின் அடிப்பகுதியில் உள்ள பொருட்கள் எரிமலை சத்தமாக வெடித்தல் மூலமாகவும் அல்லது அமைதியாகவும் பூமியின் மேற்பரப்பை அடைகிறது.
 
எரிமலைகளின் வகைகள்
எரிமலைகளை அவை செயல்படும் தன்மையை பொருத்து மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. அவை:
1. செயல்படு;ம் எரிமலைகள்
2. தணிந்த எரிமலைகள்
3. உயிரற்ற எரிமலைகள்
 
செயல்படும் எரிமலைகள்
•    இவைகள் அவ்வப்பொழுது சீராக லாவாவை வெளியேற்றுகிறது. மிக அதிகமான செயல்படும் எரிமலைகள் கடலடி மலைத்தொடர்களில் காணப்படுகிறது.
•    ஹவாய் தீவில் உள்ள மோனாலோவா உலகிலேயே மிகப்பெரிய செயல்படும் எரிமலை ஆகும். இந்தியாவில் உள்ள ஒரே ஒரு செயல்படும் எரிமலை பாரன் தீவில் உள்ளது.
•    இந்தியாவிலுள்ள தக்காண பீடபூமியின் வடமேற்கு பகுதியானது எரிமலை குழம்பால் உருவாக்கப்பட்டதாகும்.
 
தணிந்த எரிமலைகள்
•    இவ்வகை எரிமலைகள் உறங்கும் எரிமலைகள் என்றம் அழைக்கப்படுகிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்புவரை செயல்பட்டு கொண்டு இருந்தது. தற்பொழுது லாவா உமிழ்வதை நிறுத்தி உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் எரிமலை குழம்பை உமிழலாம்.
•    இத்தாலியிலுள்ள வெசூவியஸ்(Vesuvius) எரிமலை மற்றும் ஹவாய் தீவிலுள்ள மௌனகியா(Mauna Kea) எரிமலைகள் உதாரணமாக கூறலாம்.
 
உயிரற்ற எரிமலைகள்
•    இவ்வகை எரிமலைகள் இறந்த எரிமலைகள் என்று அழைக்கப்படுகிறது. இவைகள் முன்பு உமிழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் தற்பொழுது அவ்வாறு உமிழ்வது இல்லை. எதிர்காலத்திலும் உமிழாது என எதிர்பார்க்கப்படுகிறது.
•    உதாரணம் ஆப்பிரிக்காவில் உள்ள மவுண்ட் கிளிமாஞ்ரோ மற்றும் இந்தியாவில் உள்ள நார்கண்டம் தீவு ஆகியவற்றைக் கூறலாம். இது வடக்கு அந்தமான் தீவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
•    இந்திய நிலப்பகுதியில் மேலும் பல இறந்த எரிமலைகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற திருவண்ணாமலை குன்று மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள பனகா குன்று ஆகியன இறந்த எரிமலைகளாக கருதப்படுகிறது.
 
2. எக்ஸோஜெனிக் அல்லது வெளி இயக்க சக்தி
•    இக்சக்தி பூமியின் மேலோட்டு பகுதியில் உருவாகி செயல்படுகிறது. இவை பூமியின் மேலோட்டில் உள்ள ஒழுங்கற்ற நிலப் பரப்புகளை களைந்து சமநிலையை உருவாக்குகிறது. (எ.கா)ஆறு, காற்று, பனியாறு, அலைகள்

No comments:

Post a Comment