LATEST

Tuesday, January 7, 2020

TNPSC புவி அமைப்பு(Geomorphology) - பூமியின் இயக்க சக்திகள் பகுதி 2

பூமியின் இயக்க சக்திகள் பகுதி 2

II. திடீர் நகர்வுகள்(Sudden Movements)
•    இவ்வகை நகர்வுகள் பூமியின் மேலோட்டிலும் மற்றும் உள் அடுக்கிலும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வகையான நகர்வுகள் அழிவுகளை ஏற்படுத்துகிறது.
•    மிகப்பெரிய அழிவுகள் ஏற்படுத்துகிறது. மிகப்பெரிய அழிவுகள் ஏற்படுவதற்கு நிலநடுக்கம் மற்றும் எரிமலைச் செயல்களே காரணமாகும்.
 
a. நிலநடுக்கம்
•    நிலநடுக்கம் என்பது புவிமேலோட்டின் திடீரென நிகழும் அசைதல் அல்லது நடுங்குதல் ஆகும். இதன் விளைவாக நடுக்கம் அல்லது அதிர்வுகள் ஏற்படுகின்றது. இது எரிமலை நிலநடுக்கம் (Volcanic Earthquake) மற்றும் கண்ட நகர்வு நிலநடுக்கம் (Tectonic) என இருவகைப்படும்.
•    எரிமலை வெடிக்கும் போதோ அல்லது வெடிப்பதற்கு முன்பாகவோ ஏற்படும் அதிர்வுகள் எரிமலை நிலநடுக்கம் எனப்படும். கண்ட நகர்வு நிலநடுக்கம் பாறைகளின் அமைப்பு மாற்றமடைவதற்கும், உருக்குலைவதற்கும் அல்லது இடம்பெயர்வதற்கும், உருக்குலைவதற்கும் அல்லது இடம்பெயர்வதற்கும் காரணமாக அமைகிறது.
•    நிலநடுக்கம் தோன்றும் இடத்தை |நிலநடுக்க மையம் (Focus) என்றும், இம்மையத்திற்கு நேர் எதிரே பூமியின் மேற்பரப்பில் அமைந்திருக்கும் புள்ளி வெளி மையம் (Epicenter) என்றும் அழைக்கப்படுகிறது.
•    உலகில் ஒவ்வொரு ஆண்டும் 8,000 முதல் 10,000 வரையிலான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
•    சீஸ்மோகிராம் என்ற கருவியைக் கொண்டு நிலநடுக்கத்தின் அலைகள் பதிவு செய்யப்படுகிறது.
•    இந்நிலநடுக்கத்தை மதிப்பீடு செய்ய ரிக்டர் அளவுகோள் பயன்படுத்தப்படுகிறது. இதன் அலகு 0 முதல் 9 ரிக்டர் அளவை வரை ஆகும்.
 
நிலநடுக்க அலைகளின் வகைகள்
•    இவ்வலைகள் உட்புற அலைகள் (Body Waves) என்றும் மேற்புற அலைகள் (Surface Waves) என்றும் இருவகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
•    உட்புற அலைகள் நிலநடுக்க மையத்திலிருந்து ஆற்றல் வெளிப்படுவதன் மூலமாக உற்பத்தியாகி பூமியின் அனைத்து திசைகளிலும் பரவுகிறது. உட்புற அலைகளை இரண்டு வகையாக பரிக்காலாம்.
 
முதல் நிலை அலைகள் அல்லது  P அலைகள்
•    P அலைகள் மிக வேகமாக பயணிக்கிறது. இவை ஒலி அலைகளைப் போன்ற வாயு, திரவ மற்றும் திட நிலையிலுள்ள பொருட்களில் ஊடுருவிச் செல்லும்.
•    அலைகள் பயணம் செய்யும் திசையிலுள்ள பூமியின் பொருட்களை முன்னும் பின்னும் அழுத்திக் கொண்டு செல்கிறது. இது ஒரு நொடிக்கு 8 கி.மீ வேகதில் பயணிக்கிறது.
 
இரண்டாம் நிலை அலைகள் அல்லது S அலைகள்
•    இவைகள் P அலைகளை விட மெதுவாக பயணிப்பவை. இவை திடநிலையில் உள்ள பொருட்களில் மட்டுமே ஊடுருவிச் செல்லும் தன்மையுடையது இவை ஏற்படும் பொழுது, தான் பயணம் செய்யும் திசையில் உள்ள பூமியின் பொருட்களை செங்கோண திசையில் அசைத்துக் கொண்டு செல்லும் இவ்வலைகள் கயிற்றை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு நகர்த்துவதை போன்று செயல்படுகிறது. இது ஒரு நொடிக்கு 5 கி.மீ. வேகத்தில் பயணம் செய்யக் கூடியதாகும்.
•    மேற்புற அலைகள் நிலநடுக்கமானியில் இறுதியாக பதிவாகிறது. இவை பூமியில் மிக அதிகப்படியான அழிவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. இவை L அலைகள் என்றும் அறியப்படுகிறது. இவ்வலைகள் ஒரு நொடிக்கு 4 கி.மீ. வேகத்தில் பயணம் செய்கிறது.

No comments:

Post a Comment