LATEST

Tuesday, January 7, 2020

TNPSC புவி அமைப்பு(Geomorphology) - புவி மையப்பகுதியின் வெப்பநிலை, பூமியின் இயக்க சக்திகள் பகுதி 1

புவி மையப்பகுதியின் வெப்பநிலை,
பூமியின் இயக்க சக்திகள்  பகுதி 1

புவி மையப்பகுதியின் வெப்பநிலை 
•    வெப்ப நிலையானது புவியின் மேலோட்டிலிருந்து கீழ்நோக்கிச் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. புவியின் மையப்பகுதியில் வெப்பநிலையானது 5000° செல்சியஸ் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
•    இயல்பான பெரு விகித (Normal Gain Rate) வெப்பநிலையானது ஒவ்வொரு 32 மீட்டர் ஆழத்திற்கும 1°செல்சியஸ் அதிகரிக்கிறது.
 
பூமியின் இயக்க சக்திகள்
•    பூமியின் மேலோடு நிலையானது அல்ல. பூமியின் மேற்பரப்பில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளது. இந்த மாற்றங்கள் மெதுவாகவும் சில நேரங்களில் திடீர் எனவும் ஏற்படுகிறது. கடல் நிலமாக மாறும், நிலம் கடலாக மாறும். இமயமலை முன்னொரு காலத்தில் – “டெத்திஸ்” கடல்.
•    இம்மாற்றங்கள் இருவேறு சக்திகளால் ஏற்படுகிறது. அவைகள்,
1.    எண்டோஜெனிக்  (Endogenic) (அல்லது)உள் இயக்க சக்தி
2.    எக்ஸோஜெனிக் அல்லது வெளி இயக்க சக்தி

1. எண்டோஜெனிக்  (Endogenic) (அல்லது)உள் இயக்க சக்தி
•    இச்சக்தி பூமியின் உட்பகுதியில் தோன்றி செயல்படுகிறது. இவை பூமியின் மேலோட்டை உருக்குலையச் செய்வதோடு, ஒழுங்கற்ற நிலத்தோற்றங்களையும் பூமியின் மீது உருவாக்குகின்றது. புவியோட்டின் மீது பெரியளவு மாற்றங்கள் ஏற்படுவதை எண்டோஜெனிக் அல்லது கண்ட நகர்வுகள் (Tectonic Movements) என்று அழைக்கப்படுகிறது.
•    இந்நகர்வுகள் இருவகைப்படும். அவைகளாவன,
I. டையட்ரோபிஸம் (Diastrophism) அல்லது மெதுவாக நகர்தல்
II. திடீர் நகர்வுகள்(Sudden MOvements)
I. டையட்ரோபிஸம் (Diastrophism) அல்லது மெதுவாக நகர்தல்
•    டையட்ரோப்பிஸம் (ஒட்டுருவு அழிதல்) என்பது ஒரு பொதுவாக சொல். இது மெதுவாக வளைதல், மடிதல், வளர்த்தல் மற்றும் உடைதல் என பொருள்படும், இவ்வகை நகர்வானது கீழ்கண்டவாறு பிரிக்கப்படுகிறது.
 
a. எபிரோஜெனிக் (Epirogenic)அல்லது கண்ட ஆக்க நகர்வு
•    செங்குத்து நகர்வான பூமியின் மேலோட்டு; பகுதியை மேல் நோக்கி அல்லது கீழ் நோக்கி பலவீனமான கோட்டின் வழியாக நகர்த்துகிறது. இப்பலவீனமாக கோடுகள் "பிளவுகோடுகள்" எனப்படுகிறது.
•    பிளவுகோட்டிற்கு இடையே காணப்படும் பகுதி மேல் நோக்கி தள்ளப்பட்டால் அது ஒரு பிதிர்வு மலை அல்லது பீடபூமி (Plateau) எனவும் மாறாக கீழ்நோக்கி தள்ளப்பட்டால் அதை பிளவு பள்ளத்தாக்கு கொப்பரை (Basin of Rift Valley) எனப்படுகிறது.
•    பூமியின் மேலோட்டில் மிகப்பெரியளவிற்கு செங்குத்து நகர்வு ஏற்படுடவதை கண்ட ஆக்க அல்லது எபிரோஜெனிக் நகர்வு என்ற அழைக்கப்படுகிறது.
•    எ.கா. ஆப்பிரிக்காவின் பெரிய பிளவு பள்ளத்தாக்கு, நர்மதா பள்ளத்தாக்கு.
 
b. ஒரோஸெனிக் (Orogenic) அல்லது மலையாக்க நகர்வு
•    கிடைமட்டமாக நகரும் புவியோட்டில் மடிப்புகள் ஏற்படவும் மற்றும் பாறை அடுக்குகள் இடம் மாறுவதற்கும் காரணமாகிறது. சாதாரண மடிப்புகள் ஒரு மேல் வளைவையும் (Anticline) மற்றும் ஒரு கீழ் வளைவையும் (Syncline)கொண்டிருக்கும்.
•    மடிப்புகள் மேன்மேலும் அழுத்தப்பட்டு பாறை அடுக்குகள் நீண்ட தொலைவிற்கு இடம் பெயர்தலின் விளைவாக பல சிக்கலான மடிப்புகள் தோன்றுகிறது. புவியோட்டில் மிகப்பெரிய அளவிற்கு கிடைமட்ட நகர்வு ஏற்படுவதை "மலையாக்க நகர்வு" என்று அழைக்கப்படுகிறது.
•    உலகின் மடிப்பு மலைகள் தோன்றுவதற்கு இதுவே காரணமாகும். உதாரணம் இமயமலை.

No comments:

Post a Comment