LATEST

Tuesday, January 7, 2020

TNPSC புவி அமைப்பு(Geomorphology) - கண்டங்கள் மற்றும் பேராழிகள் உருவாகுதல், பூமியின் உள்ளமைப்பு

கண்டங்கள் மற்றும் பேராழிகள் உருவாகுதல், பூமியின் உள்ளமைப்பு

 கண்டங்கள் மற்றும் பேராழிகள் உருவாகுதல்
•    பூமியின் மீது தற்பொழுது உள்ள நில மற்றும் நீர் பரவலானது எப்பொழுதும் ஒரே நிலையில் இருந்ததில்லை. மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள அனைத்து கண்டங்களும் தென் துருவத்தில் ஒன்றிணைந்து இருந்தது. இப்பெரிய நிலப்பரப்பு "பான்ஜியா" (Pangea) என்று அழைக்கப்பட்டது. இந்நிலப்பரப்பை சுற்றி இருந்த பெரிய பேராழி "பெந்தலாசா" (Panthalassa) என்று அழைக்கப்பட்டது.

•    பிறகு பான்ஜியா பல தட்டுகளாக உடைந்தது. இது கண்டப்போக்குக் கோட்பாடு (Continental Drift) எனப்படுகிறது. ஆல்ஃபிரட் வெக்னர் என்ற ஜெர்மானிய வானிலை ஆராய்ச்சியாளர் 1812 ஆம் ஆண்டு இக்கோட்பாட்டை முன்மொழிந்தார். 

•    கடல்தரை விரிவாக்க (Sea Floor Spreading) கோட்பாட்டின் படி கவச அடுக்கிலிருந்து மேலெழுகிற மாக்மா பெருங்கடல் ஓட்டின் மீது மக்கவாட்டில் பரவுகிறது. மேலும் பக்கவாட்டில் பரவுகிற மாக்மாவினால் பரவுகிறது. மேலும் பக்கவாட்டில் பரவுகிற மாக்மாவினால் அவ்விடத்திலுள்ள பெருங்கடல் ஓடு நகர்த்தப்படுகிறது. அவ்வாறு நகர்த்தப்படுகிற பெருங்கடல் ஒடுக்குப் பதிலாக அவ்விடத்தில் புதிய பெருங்கடல் ஓடு உருவாகிறது.

•    கண்ட போக்கு மற்றும் கடல்தரை விரிவாக்கம் ஆகிய இரண்டு கோட்பாடுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, 1968 ஆம் ஆண்டு ஒரு புதிய கோட்பாடு வெளியிடப்பட்டது. இது "நிலவியல் பலகைக் கோட்பாடு" (Therory of plate techtonics) என அழைக்கப்பட்டது.

•    இதன்படி திண்மையான பாறைகோளத்தின் வெளிபகுதி தனித்தனி பாறைத்துண்டுகளாக உடைந்துள்ளது என தெரியவருகிறது. இப்பாறைத் துண்டுகளே நிலவியல் பலகைகள் (Lithosperic Plates) என அழைக்ப்படுகிறது.

•    இவை ஏழு பெரிய தட்டுகளாகவும், பல சிறிய தட்டுகளாகவும் உடைப்பட்டுள்ள. யுரேசியா, அண்டார்டிகா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், ஆப்ரிக்கா மற்றும் இந்தோ-ஆஸ்திரேலியா போன்றவை பெரிய தட்டுகளாகும். 

•    கரீபியன் பிலப்பைன்ஸ், கோகோஸ் மற்றும் நாஸ்கா போன்றவை சிறிய தட்டுகளாகும். இத்தட்டுகள் ஒன்றை ஒன்று நோக்கி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கின்றன.

பூமியின் உள்ளமைப்பு
பூமியின் உட்பகுதியானது வேதப்பொருட்களின் கட்டமைப்பு மற்றும் பண்புகளின் அடிப்படையில் மூன்று அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது. அவைகள் பூமி மேலோடு, கவசம் மற்றும் கருவம் ஆகும்.
 
பூமியின் அடுக்குகள்
மேலோடு  -   கவசம்  -   கருவம்
சியால்  -   வெளிக்கவசம்  -   வெளிக்கருவம்
சிமா  -   உட்கவசம்   -  உட்கருவம்

மேலோடு
•    பூமியின் மேற்பரப்பு |மேலோடு| (Crust) அல்லது |நிலக்கோளம்| என அழைக்கப்படுகிறது. கண்ட மேலோடு சியால் (Sial) எனப்படுகிறது. இது சிலிக்கா மற்றும் அலுமினியத்தலானது.
•    கடலடி மேலோடு பசால்ட் அடுக்குகளால் உருவானதாகும்.  இதை |சிமா| (Sima) என்று அழைக்கப்படுகிறது. இது சிலிக்கா மற்றும் மெக்னீசியத்தால் ஆனது.
•    பூமியின் மேலோடு கண்டப்பகுதியில் அதிக தடிமனாகவும் மற்றும் கடல் பகுதியில் மெலிதாகவும் உள்ளது. சியால் அடுக்கானது சிமா அடுக்கின் மீது மிதந்து கொண்டு உள்ளது.
•    மேலோட்டின் சராசரி அடர்த்தி எண் = 3
 
கவசம்
•    கவசம் (Mantle) பூமியின் மேலோட்டிற்கும் கருவத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கவசம் பூமியின் எடையில் 83 சதவீதத்தை கொண்டுள்ளது.
•    பல தட்டுகளால் ஆனது. கண்ட நகர்வை உருவாக்கும்.
•    இவ்வடுக்கின் மேல் பகுதியை அஸ்தினோஸ்பியர் (Althenosphere) என்று அழைக்கப்படுகிறது. 
•    இது 700 கி.மீ. ஆழம் வரை பரவிக் காணப்படுகிறது. இக்கவச அடுக்கின் கீழ்ப் பகுதி குழம்பு (Magma) நிலையையும், நெகிழும் தன்மையையும் கொண்டுள்ளது.
•    சராசரி அடர்த்தி எண் = 8
 
கருவம்
•    பூமியின் உள் மைய அடுக்கை கருவம் (Core) அல்லது "பேரிஸ்பியர்" (Barysphere) என அழைக்கப்படுகிறது. 
•    நிக்கல் மற்றும் இரும்பு இருப்பதன் காரணமாக இது "நைஃப்" (NIFE) எனவும் கூறப்படுகிறது. இவ்வடுக்கு பூமியின் காந்த விசையை உற்பத்தி செய்கிறது.
•    இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவைகள் வெளிக் கருவமானது திரவ நிலையிலும் உள்கருவமானது திட நிலையிலும் உள்ளது.
•    சராசரி அடர்த்தி எண் = 12

No comments:

Post a Comment