LATEST

Monday, January 6, 2020

TNPSC புவியியல் பேரண்டம் - நிலத்தோற்றங்கள் (Land Forms)

நிலத்தோற்றங்கள் (Land Forms)

•    மலை: உயரமான முகடுகளுடன் கூடிய நில அமைப்பே மலை. பல மலைகள் தொடர்ச்சியாக அமையும்போது அது மலைத்தொடர் என வழங்கப்படுகிறது. உலகில் மிக உயரமான மலைத்தொடர் இமயமலைத்தொடர் ஆகும்.
•    பீடபூமி: சுற்றியுள்ள நிலப்பகுதிகளைவிடச் சற்றே உயரமாகவும் அதன் மேற்பகுதி தட்டையாகவும் உள்ள நில அமைப்பு பீடபூமி எனப்படுகிறது. திபெத் பீடபூமிதான் உலகின் மிக உயரமான பீடபூமி ஆகும்.
•    சமவெளி: பரந்து விரிந்து தாழ்வான சமமான நிலப்பரப்பு சமவெளி எனப்படுகிறது.
•    நிலச்சந்தி: விரிந்த இரண்டு நிலப்பரப்புகளுடன் மிகக் குறுகிய நிலப்பரப்பு இணைந்திருந்தால் அதனை நிலச்சந்தி (Isthmus) என அழைப்பர். தேன் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை இணைப்பது பனாமா நிலச்சந்தி ஆகும்.
•    நீர்ச்சந்தி: இரண்டு நீர்ப் பரப்புகளை இணைக்கும் குறுகிய நீர்ப்பகுதிக்கு நீர்ச்ச்ந்தி என்று பெயர்
•    தீபகற்பம்: மூன்று பக்கங்கள் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பகுதிக்குத் தீபகற்பம் என்று பெயர். இந்தியா ஒரு தீபகற்பம் (Peninsula).
•    விரிகுடா: மூன்று பக்கங்களும் நிலமாகவும் அமைந்த நீர்ப் பரப்புக்கு விரிகுடா (Bay) என்று பெயர். ஆளவில் சற்றே சிறியதாக இருந்தால் இதனை வளைகுடா என (Gulf) அழைப்பர்.
•    தீவு: நான்கு பக்கங்களும் நீரால் சூழப்பட்ட நிலப்பகுதியைத் தீவு எனக் கூறுகிறோம். இலங்கை ஒரு தீவு. பல தீவுகள் சேர்ந்து அமையப் பெற்றால் அவை தீவுக் கூட்டங்கள் எனப்படுகிறன்றன.

No comments:

Post a Comment