LATEST

Monday, January 6, 2020

TNPSC புவியியல் பேரண்டம் - தீவுகள்(Islands), பெருங்கடல்கள்

தீவுகள்(Islands), பெருங்கடல்கள்

தீவுகள்(Islands)
•    நான்கு பக்கமும் நீர். இலங்கை ஒரு தீவு.
•    பல தீவுகள் சேர்ந்தால் அது தீவுக்கூட்டம்(Archipelago) எ.கா. Indonesia
 
பெருங்கடல்கள்:
•    பூமியின் மேற்பரப்பில் 2/3 நீர் உள்ளது. பெருந்திரளான நீர்ப்பரப்புப் தொகுதியைப் பெருங்கடல் என்கிறோம். உலகில் ஐந்து பெருங்கடல்கள் உள்ளன.
 
1. பசிபிக் பெருங்கடல்:
•    உலகில் ஆழமான பெருங்கடல் பசிபிக் பெருங்கடல்தான். இங்குத் தொடர்ச்சியான தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ளன.
•    நிறைய எரிமலைகள் இருப்பதால் இது “Pasific Ring of Fire” என்று அழைக்கப்படுகிறது. முக்கோண வடிவமுடையது. பூமியின் மொத்தப்பரப்பில் 33% , சராசரி ஆழம் – 5000 மீட்டர்
•    பெரும்பான்மையான தீவுகளில் செயல்படும் எரிமலைகள் நெருப்புக் குழம்பைக் கக்குவதால் இப்பகுதி பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படுகிறது.
•    உலகின் மிக ஆழமான மரியானா அகழி எனும் கடல்பகுதி இப்பெருங்கடலில்தான் உள்ளது. இந்த "மரியானா அகழி" எனும் பள்ளத்திற்குள் இமயமலையின் எவரெஸ்டு சிகரம் கூட அமிழ்ந்துவிடும்.
•    நியூசிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், ஹவாய் போன்றவை famous.
 
2. அட்லாண்டிக் பெருங்கடல்:
•    இது உலகின் இரண்டாவது பெருங்கடல். மிக வலிமை கொண்ட சூறாவளிகள் இப்பெருங்கடலில் தாம் அதிகமாகத் தோன்றுகின்றன.
•    இது S வடிவமுடையது. பூமியின் மொத்தப்பரப்பில் 16.5%. பசிபிக் பேராழியின் 50%.
•    முக்கிய Islands – Greenland, British Islands, நியூபவுண்ட்லாந்து, West Indies, வெர்டி முனை, கேனரீஸ்.
•    இது உலகின் மிகவும் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும். 
 
3. இந்தியப் பெருங்கடல்:
•    இது உலகின் மூன்றாவது பெரிய பெருங்கடல். இப்பெருங்கடலில் உருவாகும் பருவக் காற்று மழையினால் தான் இந்தியா வளம் பெருகிறது.
•    அனைத்து பேராழிகளின் மொத்தப்பரப்பில் 20%, தென் முனையில் அட்லாண்டிக் பேராழியுடனும், கிழக்கு –தென் கிழக்கில் பசிபிக் பேராழியுடனும் இணைகிறது.
 
4. அண்டார்டிக் பெருங்கடல்:
•    தென்துருவப் பகுதியில் உள்ள அண்டார்டிகா கண்டத்தைச் சுற்றிப் பரந்துள்ள கடல் தென் பெருங்கடல் எனப்படுகிறது. இதனை அண்டார்டிக் பெருங்கடல் என்றும் அழைப்பர்.
•    அலெக்சாண்டர் தீவுகள், பாலினி தீவுகள், ரோஸ் தீவுகள்.
•    Temperature – 10°C to 2°C
•    குளிர்காலத்தில் மேற்பகுதி பனிக்கட்டியாக மாறிவிடும்.
 
5. ஆர்டிக் பெருங்கடல்:
•    வட துருவப் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறிய பெருங்கடல் ஆர்டிக் பெருங்கடல் ஆகும். இங்குப் பனிப்பாறைகள் மிகுந்துள்ளன.
•    இது வட்ட வடிவமானது.
•    விக்டோரியா தீவுகள், எலிசபெத் தீவுகள், ஐஸ்லாந்து, ஸ்பிட் பெர்ஜென், நோவாகா சோம்லியா, etc.,

No comments:

Post a Comment