இந்தியாவும் உலக அமைதியும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 1
1. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் 1960ஆம் ஆண்டு உள்நாட்டுப்போர் வெடித்தது.2. 1963-இல் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் உருவாவதற்கு இந்தியா முக்கியப் பங்காற்றியது.
3. நெல்சன் மண்டேலா தென் ஆப்பிரிக்கா நாட்டில் காணப்பட்ட இனப்பிரச்சனைக்கு எதிராகப் பாடுபட்டார்.
4. ஹாலந்து நாட்டின் பிடியிலிருந்து இந்தோனேஷியா விடுதலை அடைவதற்கு இந்தியா பெரிதும் உதவியது.
5. வங்காள தேசம் சுதந்திரம் பெற்ற ஆண்டு 1971.
6. இந்தியா அகிம்சை முறையில் சுதந்திரம் பெற வழி வகுத்தவர் காந்திஜி.
7. ஐ.நா.வில் சீனா உறுப்பு நாடாகச் சேருவதற்கு இந்தியா ஆதரவு கொடுத்தது.
8. தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கையை ஒழித்தவர் நெல்சன் மண்டேலா.
9. தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பின் முதல் கூட்டம் டாக்கா நகரில் நடைபெற்றது.
10. சீனா குடியரசான ஆண்டு 1949.
No comments:
Post a Comment