இந்தியாவும் உலக அமைதியும்
கோடிட்ட இடத்தை நிரப்புக பகுதி 2
1. இலங்கை புத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு.
2. வங்கதேசம் சுதந்திரம் அடைய பெரும் முயற்சி எடுத்தவர் இந்திரா காந்தி.
3. எகிப்து அதிபர் நாசர் சூயஸ் கால்வாயை 1956ஆம் ஆண்டு தேசிய மயமாக்கினார்.
4. காங்கோவிற்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படைத்தளபதி கே.ஏ.எஸ்.இராஜா.
5. 2007-இல் டெல்லியில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்து கொண்டவர் ஆப்கானிஸ்தான் நாட்டு அதிபர் ஆவார்.
6. பஞ்சசீலக் கொள்கையினை நேரு பாண்டுங் மாநாட்டில் வெளியிட்ட ஆண்டு 1955.
7. இந்தியாவின் பெரும் முயற்சியினால் கொரியா மற்றும் இந்தோ-சீனா ஆகிய நாடுகளில் அமைதி நிலை நாட்டப்பட்டது.
8. இந்தியா ‘ஒரு மாபெரும் அமைதியை உருவாக்கும் நாடு’ என்றழைக்கப்படுகிறது.
9. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை உலக அமைதி மூலம் மட்டுமே அடைய முடியும்.
10. இந்தியப் படைத்தளபதி திம்மையா தலைமையில் ஐ.நா.அமைதி பாதுகாப்புப் படை சைப்ரஸ் தீவுக்கு அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment