மேற்குத் தொடர்ச்சி மலைகள் பகுதி 1
நீலகிரி மலை:
• இதன் சிறப்பு பெயர் மலைகளின் ராணி. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 – 2400 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2693 மீ).
ஆனை மலை:
• ஆனைமலையின் உயர்ந்த சிகரம் ஆனை முடி (2695 மீ). இது தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரமாகும். இது பாலக்காட்டு கணவாயில் உள்ளது. இதன் மேற்கே கேரளாவும், கிழக்கில் பழனி மழையும் தெற்கே ஏலக்காய் மலையும் எல்லைகளாக உள்ளன.
பழனி மலை:
• நீலகிரியிலிருந்தும், கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் 1500 மீ முதல் 2000மீ உயரத்தில் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு நோக்கி செல்கிறது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர். பழனி குன்றுக்கு தெற்கே வருச நாடு, ஆண்டுப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.
• பழனிமலை ஒரு தாழ்ந்த குன்றாகும்.
ஏலகாய் மலை:
• இது பழனி மலைக்கு தெற்கே அமைந்துள்ளது.ஏலகாய் மலையில் பெரியார் ஏரிக்கு அருகில் தேக்கடி சரணாலம் உள்ளது.இதன் வடகிழக்கில் பழனி மலையும், வடமேற்கில் ஆனை மலையும், தென் பகுதியில் அகத்திய மலையும் உள்ளது.
கொடைக்கானல் மலை:
• கொடைக்கானல் மலை பழனி மலையின் தொடர்ச்சியாகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ பூக்கிறது.
No comments:
Post a Comment