LATEST

Friday, February 14, 2020

மலைகள்

மலைகள்

தமிழ்நாட்டின் மலைப்பகுதி 2 வகைகள். அவை
1. மேற்குத் தொடர்ச்சி மலை
2. கிழக்குத்  தொடர்ச்சி மலை
மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில் இணைகின்றன. இரு மலைகளும் அமைய பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
 
மேற்குத் தொடர்ச்சி மலை
•    இதனை மேலைப்படிகள் என்று ஆங்கிலேயர்அழைத்தனர்.
•    தமிழ்நாட்டில்  மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு பரவியுள்ளது.
•    சராசரி உயரம் –1000மீ முதல் 1500மீ வரை
•    தமிழ்நாட்டின் உயரமான சிகரம் – தொட்டபெட்டா(2620மீ)
•    மற்றொரு உயரமான சிகரம் முக்கூர்த்தி (2540மீ)
•    மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700மீ)
 
தமிழகத்தில்  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:
1. நீலகிரி மலை
2. ஆனை மலை
3. பழனி மலை
4. கொடைக்கானல் மலை
5. குற்றால மலை
6. மகேந்திரகிரி மலை
7. அகத்திய மலை
8. ஏலகாய் மலை
9. சிவகிரி மலை
10. வருஷநாடு மலை

No comments:

Post a Comment