LATEST

Friday, February 14, 2020

பீடபூமி

பீடபூமி

•    மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் இடையில் பீடபூமிப் பகுதி அமைந்துள்ளது. இப்பீடபூமி நிலம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்து காணப்படுகிறது.
•    தமிழ்நாட்டில் சேர்வராயன் குன்றுகளுக்கு மேற்கில் காணப்படும் பாராமஹால் பீடபூமி மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாகும். இது 350 முதல் 710 மீட்டர் வரை உயரமுடையது.
•    நீலகிரியிலிருந்து தருமபுரி வரையுள்ள பகுதி கோயம்புத்தூர் பீடபூமியாகும். இது பாறை வடிவில் அமைந்துள்ளது. இதில் சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டம் அடங்கும். இதன் உயரம் 150 – 450மீ வரை காணப்படுகிறது.
•    2,600ச.கி.மீ பரப்பு கொண்ட நீலகிரி பீடபூமி மோயாற்று நீரால் மைசூர் பீடபூமியிலிருந்து பிரிக்கப்படுகிறது. இது 1800 – 2900 மீட்டர் உயரமுடையது.
 
பீடபூமி: கோயம்புத்தூர் பீடபூமி        பாயும் ஆறுகள்அமைவிடம்: நீலகிரியிலிருந்து தர்மபுரி வரையான பகுதி    
பாயும் ஆறுகள்: அமராவதி, பவானி, காவேரி, நொய்யல்

பீடபூமி: தருமபுரி பீடபூமி    
அமைவிடம்: பாலாற்றுக்கும் காவேரிக்கும் இடைப்பட்ட பகுதி     
பாயும் ஆறுகள்: பாலாறு, தென்பெண்ணை 
பீடபூமி:: மதுரை உயர் நிலம்    
அமைவிடம்: மதுரைக்கும், கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட பகுதி     
பாயும் ஆறுகள்: வைகை, தாமிரபரணி

No comments:

Post a Comment