LATEST

Friday, February 14, 2020

சமவெளி

சமவெளி

தமிழ்நாட்டில் உள்ள சமவெளியினை 3 பிரிவாக பிரிக்கலாம். அவை
1.    சோழமண்டல கடற்கரைச் சமவெளி
2.    காவிரி வண்டல் சமவெளி
3.    தெற்குப் பகுதியில் உள்ள வறண்ட சமவெளிப் பகுதி
 
சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி:
•    சோழமண்டலக் கடற்கரைச் சமவெளி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சரிந்துள்ளது. இச்சமவெளி திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பரவியுள்ளது.
•    வடக்கில் செங்கம் கணவாயும், தெற்கில் ஆத்தூர் கணவாயும் இச்சமவெளியைப் பீடபூமியிலிருந்து பிரிகின்றன.
•    இதில் பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு ஆகிய நதிகளின் வடிகால்களும் அடங்கும். இச்சமவெளியிலுள்ள வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கில் “ஆர்டிசன் நீருற்றுகள்” உள்ளன.

காவிரி வண்டல் சமவெளி:
•    இச்சமவெளியில் காவேரி மற்றும் அதன் உபநதிகள் பாய்கின்றன. இதில் தருமபுரி, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
•    வடக்கில் பச்சைமலை மற்றும் கொல்லிமலையும் தெற்கில் விராலிமலையும் இச்சமவெளியைப் பிரிக்கின்றன.
 
வறண்ட தென் சமவெளி:
•    இவைகள் மலையடி வாரத்தில் உயர்ந்த பகுதிகளாகக் கனப்படுகின்றன. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும்.
•    மன்னார் வளைகுடாவின் தலைப்பகுதியில் கிழக்கு கடற்கரையில் 3 மீட்டர் உயரத்திற்கு மேல் முருகைப்பார்கள் காணப்படுகின்றன.
•    தூத்துக்குடியில் கடற்கரைக்கு இணையாக 10 மீட்டர் உயரத்திற்கும் மேலான தேரி மணல் மேடுகள் காணப்படுகின்றன.
•    கடற்கரைக்கு இணையாக வங்காள விரிகுடா கிழக்கு தொடர்ச்சி மலை 500 கி. மீ.
•    முக்கிய ஆறுகள் - 1. காவிரி 2. வைகை 3. தாமிரபரணி 4. தென்பெண்ணை 5. பாலாறு
•    காவிரி ஆறு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்கு இடையே பிரச்சினை எழுந்துள்ளது. இது தொடர்பாக மைய அரசு Cauvery Water Disputes Tribunal ஜீன் 1990ல் அமைந்துள்ளது. 


கிருஷ்ணா நதி நீர்த் திட்டம்
•    இத்திட்டம் கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு 15 டி.எம்.சி. குடி நீர் கொண்டு வரும் திட்டமாகும்.
•    இத்திட்டம் தொடர்பாக 18.4.1983ல் தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
•    செப்டம்பர் 1996 முதல் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து நீர் 152 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள பூண்டி நீர்ததேக்கத்திற்கு வருகின்றது
•    இத்திட்டத்திற்காக சத்திய சாய்பாபா அவர்கள் தற்போது உதவி செய்துள்ளார்.

வீர நாராயணன் ஏரி நீர்த் திட்டம்
•    சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஏரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள இவ் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வரப்படுகிறது
•    இவ் ஏரி கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் குறிப்பிடப்படுகிறது

No comments:

Post a Comment