LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டின் அணைகள் மற்றும் நீர் பாசனங்கள் பகுதி 2

தமிழ்நாட்டின் அணைகள் மற்றும் நீர் பாசனங்கள் பகுதி 2

வைகையணைத் திட்டம் 
 
•    வைகை நதியின் குறுக்கே மதுரைக்கு அருகே ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. வைகை நதிக்குப் பெரியாற்று நீர்த் தேக்கத்தில் இருந்து நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.

பெரியார் திட்டம் 
 
•    வைகை நதி பல மாதம் வறண்டு விடுவதால் பெரியார் திட்டம் வகுக்கப்பட்டது. ஏலக்காய் மலையின் மேற்குச் சரிவில் உற்பத்தியாகி, கேரள மாநிலத்தின் வழியாக ஓடி, அரபிக் கடலில் கலக்கும் இந்நதியின் குறுக்கே – தேக்கடிக்கு அருகில் ஓர் அணை கட்டி மலையைக் குடைந்து, கிழக்குப் பக்கம் நீரைக் கொண்டுவந்து வைகைச் சமவெளி வளப்படுத்தப்பட்டுள்ளது.
•    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை நதியில் அணை கட்டப்பட்டுள்ளது.

சாத்தனூர் அணை 

•    திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை நதியில் இவ்வணை கட்டப்பட்டுள்ளது

வீடுர் அணை 

•    திண்டிவனம் வட்டத்தில் பாய்கின்ற வராக நதியும் தொண்டை ஆறும் கூடும் இடத்தில் வீடுர் அணை கட்டப்பட்டுள்ளது

ஆளியாறு – பரம்பிக்குளம் திட்டம் 

•    பரம்பி ஆறு கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலைகளில் தோன்றி, மேற்கு நோக்கி கேரள மாநிலம் வழியாக ஓடுகிறது. இந்நதியில் ஓர் அணைகட்டி, நீரைத் திருப்பி 19 கி.மீ நீள மலையைக் குடைந்து அதன் வழியாக பொள்ளாச்சி வட்டத்தில் பாயும் ஆளியாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது

ஏரிப்பாசனம் 

•    தமிழ்நாட்டில் பெரியதும் சிறியதுமாக ஏறத்தாழ 33,000 ஏரிகளும் குளங்களும் உள்ளன
•    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் பெரிய ஏரிகள் பல காணப்படுகின்றன. மிகப்பெரிய ஏரிகளான செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு ஏரி போன்ற பல பெரிய ஏரிகள் இம்மாவட்டத்தில் உள்ளன. எனவே இதனை வட்டம் என அழைக்கிறோம். காவேரிப்பாக்கம் ஏரி, தென் ஆற்காட்டில் உள்ள வீராணம் ஏரி முதலியன மிகப் பெரிய ஏரிகள் ஆகும்

பூண்டி நீர்த் தேக்கம் 

•    திருவள்ளுர் மாவட்டத்தில் அமைந்த பூண்டி நீர்தேக்கம் சத்தியமூர்த்தி சாகர் அணை எனப்படும். சென்னை குடிநீர் தேக்கி வைக்கப்படும் முக்கிய இடமாகும்

No comments:

Post a Comment