LATEST

Saturday, February 15, 2020

தமிழ்நாட்டின் அணைகள் மற்றும் நீர் பாசனங்கள் பகுதி 1

தமிழ்நாட்டின் அணைகள் மற்றும் நீர் பாசனங்கள்

கால்வாய் பாசனம்
 
•    மொத்தப் பாசனப் பரப்பின் பெரும் பகுதி கால்வாய்ப் பாசனமாகும்
•    புல்லம்பாடி கட்டலை, கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன், கல்லணை, மேட்டூர் போன்ற பல கால்வாய்கள் பாசனத்திற்குப் பயன்படுகின்றன
•    1932ஆம் ஆண்டல் ஆங்கில ஆட்சியின் போது தமிழ்நாட்டில் மேட்டூர் அணை கட்டப்பட்டது

ஆரணி ஆற்றுத்திட்டம் 

•    ஆரணி நதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பாய்கிறது.

அமராவதி அணைத்திட்டம் 

•    காவிரியின் துணை நதிகளில் ஒன்றான அமராவதி நதி கோயம்புத்தூர் மாவட்டம் வழியாகப் பாய்கிறது.

மேட்டூர் அணை 

•    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் என்னுமிடத்தில் காவிரி நதியின் குறுக்கே ஓர் அணை கட்டப்பட்டுள்ளது.

மேட்டூர் - திருச்செங்கோடு கால்வாய் 

•    சேலம் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வட்டங்களிலும் ஈரோடு மாவட்டத்திலும் ஏறத்தாழ 16,200 ஹெக்டேர் நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது

புதிய புள்ளம்பாடி கால்வாய் திட்டம்: 

•    திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மேலணைக்கு மேற்கு பக்கத்தில் காவிரியிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டுள்ளது 

மணிமுத்தாறு திட்டம் 
 
•    தாமிரபரணியின் துணையாறான மணிமுத்தாற்றின் குறுக்கே திருநெல்வேலி மாவட்டத்தில் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது
•    தாமிரபரணி நதியின் மீது மருதூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் இரு அணைகள் கட்டி நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment