தமிழ்நாட்டில் நிலத் தோற்றம் மற்றும் மழைப் பொழிவு
தமிழ்நாட்டில் நிலத் தோற்றம் மற்றும் மழைப் பொழிவு ஆகியவற்றின் அடிப்படையில் 5 வகையான காடுகள் காணப்படுகின்றன. அவை:
1. மித வெப்ப மண்டல மலைக்காடுகள்: நீலகிரி, ஆணைமலை, பழனி மலை போன்ற இடங்களில் 1500 மீட்டருக்கு மேல் ஈரம் உடைய மித வெப்ப மண்டல மலைக்காடுகள் காணப்படுகின்றது
2. துணை வெப்ப மண்டல மலைக்காடுகள்: நீலகிரி மற்றும் பழனி மலையில் 1500 மீட்டருக்கும் குறைவான துணை வெப்ப மண்டல காடுகள் காணப்படுகின்றன
3. வெப்ப மண்டல வறண்ட பசுமைக் காடுகள்: கடற்கரை பகுதியில் காணப்படுகின்றன. அடர்ந்த குட்டையான புதர்கள் உண்டு
4. முட்புதர்க் காடுகள்: வறண்ட காலம் நீண்டும் குறைந்த மழைப்பொழிவும் உள்ள இடங்களில் காணப்படுகின்றன. இங்கு முட்புதர்கள் உண்டு.
5. மாங்குரோவ் காடுகள்: கிழக்கு கடற்கரையில் இவ்வகை காடுகள் உண்டு. வேதாரண்யம், பிச்சாவரம் போன்ற இடங்களில் காணப்படும் இவ்வகை காடுகளில் சுந்தரி வகை மரங்கள் காணப்படுகின்றது
No comments:
Post a Comment