LATEST

Thursday, February 20, 2020

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள் பகுதி 2

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகள்

3. வெவ்வேறு மூலாதாரங்களிலிருந்து பெறப்பட்டவை

•    இந்திய அரசுச் சட்டம் 1935 அவசர நிலை பிரகடனம் ->    கூட்டரசு முறை, ஆளுநர் அலுவல், நீதித்துறை, பொதுத் தேர்வு ஆணையங்கள், அவசரகாலத் திட்டங்கள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த விவரங்கள்.
•    பிரிட்டிஷ் அரசியலமைப்பு -> நாடாளுமன்ற அரச, சட்டத்தின் படியான விதி, சட்டமியற்றும் செய்முறை ஒற்றைக்குடியுரிமை, கேபினெட் முறை, தனியுரிமை நீதிப்பேராணை, நாடாளுமன்ற சலுகைகள் மற்றம் ஈரவை முறை
•    அமெரிக்க அரசியலமைப்பு -> உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை இ துணை குடியரசுத் தலைவர் பதவி, குடியரசுத் தலைவர் மீதான அரசியல் குற்றச்சாட்டு, நீதிப்புனராய்வு, நீதித்துறை சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்
•    அயர்லாந்து அரசியலமைப்பு -> ராஜ்ய சபாவிற்கு உறுப்பினர்களை நியமனம் செய்தல் மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தல் முறை, அரசின் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
•    கனடா அரசியலமைப்பு -> உச்சநீதிமன்ற ஆலோசனை எல்லை ஆளுநர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்படுவது, மீதமுள்ள அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருப்பதுää மற்றும் உறுதியான மத்திய அரசு மத்தியில் வலிமையான கூட்டாட்சி.
•    ஆஸ்திரேலியா அரசியலமைப்பு -> நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டமர்வு, வணிகம் மற்றும் கலப்பு, மற்றும் பொதுப்பட்டியல்
•    ஜெர்மனி அரசியலமைப்பு -> அவசர காலத்தில் அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக தடை செய்தல்
•    ரஷிய அரசியலமைப்பு -> அடிப்படைக் கடமைகள் மற்றும் முகவுரையில் உள்ள நீதிக் குறிக்கோள் (சமூக பொருளாதார மற்றும் அரசியல்)
•    பிரெஞ்சு அரசியலமைப்பு -> முகவுரையில் உள்ள சமத்துவம் மற்றும் சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் குடியரசு.
•    தென்னாப்பிரிக்க அரசியலமைப்பு -> அரசியலமைப்பு சட்டதிருத்த செயல்முறை மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தல்.
•    ப்பான் அரசியலமைப்பு -> சட்டத்தினால் அமைக்கப்பட்ட ஆட்சிமுறை

4. நாடாளுமன்ற ஜனநாயகம்

•    இந்தியா, நாடாளுமன்ற வடிவத்திலான ஜனநாயகத்தைப் பெற்றிருக்கிறது. இது பிரிட்டிஷ் அமைப்பு முறையிலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில் சட்டமியற்றுவோருக்கும் நிர்வாகத்திற்கும் மிக நெருக்கமான உறவு நிலவும். அமைச்சரவை என்பது நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்களின் நடுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறது.
•    அமைச்சரவை பின்னதற்குப் பொறுப்புடையது. உண்மையில், அமைச்சரவை பதவியில் நீடித்திருப்பது, நாடாளுமன்ற & சட்டமன்றத்தின் நம்பிக்கையை எவ்வளவு காலத்திற்குப் பெற்றிருக்கிறதோ அவ்வளவு காலம் வரையில் தான். இந்த ஜனநாயகத்தின் வடிவத்தில் அரசின் தலைமை என்பது பெயரளவிலானது தான்.
•    இந்தியாவில், குடியரசுத் தலைவரே அரசின் தலைவர். அரசியல் சட்டப10ர்வமாக குடியரசுத் தலைவர் எண்ணற்ற அதிகாரங்களைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால், நடைமுறையில் பிரதமரால் தலைமை வகிக்கப்படும் அமைச்சரவைக் குழுதான் அத்தகைய அதிகாரங்களைப் உபயோகிக்கிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவின் ஆலோசனைகளின் பேரில் செயல்படுகிறார்.

No comments:

Post a Comment