இந்திய காலநிலை பகுதி 2
தென்மேற்கு பருவ காலம் - ஜீன் - அக்டோபர்
• இது ஜீன் மாதத்தில் தொடங்குகிறது. கோடை கால இறுதிக் கட்டத்தில் வடமேற்கு இந்தியாவின் பெரும்பகுதியிலும் மத்திய இந்தியாவில் தாழ்ந்த பகுதிகளிலும் உச்ச வெப்பநிலை காணப்படுகிறது. ஏனெனில் சூரியன் கடக ரேகைக்கு அருகில் அதன் கதிர்கள் இந்தியாவில் செங்குத்தாக விழுகின்றன.
• உச்ச வெப்பநிலை காரணமாக அங்குள்ள காற்று வெப்படைந்து விரிவடைகிறது. விரிவடைகின்ற காரணத்தால் காற்று லேசாகி ஒரு தீவிர தாழ் அழுத்தம் வடமேற்கு இந்தியாவில் உண்டாகிறது. இத்தாழ்வழுத்தத்தை நோக்கி தென்மேற்கு பருவக்காற்று வீசுகிறது. இக்காற்று வீசத்தொடங்குவது மழைக் காலத்தின் தொடக்கத்தை குறிக்கின்றது.
• இச்சமயத்தில் பூமத்திய ரேகைக்கு தெற்கில் மகரரேகை பகுதியில் காற்றின் அழுத்தம் அதிகமாக உள்ளது. இவ்வுயர் அழுத்த மண்டலத்திலிருந்து வடஇந்தியாவில் உருவாகியுள்ள தீவிர தாழ் அழுத்த மண்டலத்தை நோக்கி காற்று வீசத் தொடங்குகிறது. மகரரேகை பகுதியிலிருந்து தென்கிழக்கு திசையில் வீசும் காற்று பூமத்தியரேகையை கடந்தும் பூமியின் சுழற்சியின் காரணமாக திசை மாறி தென்மேற்கு பருவக்காற்றாக இந்தியாவின் மீது வீசுகிறது.

• இப்பருவ காற்று இந்திய பெருங்கடலிலிருந்து வீசும்போது இது கிளைகளாக பிரிகிறது
1. அரபிக்கடல் கிளை
2. வங்காள விரிகுடா கிளை
1. அரபிக்கடல் கிளை
• அரபிக்கடல் கிளை கேரளா முதல் காம்பே வளைகுடா வரை வீசுகிறது. இக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்பட்டு மேலெழும்புகிறது.
• உயரே செல்லும் காற்று குளிர்வதால் நீராவியை தாங்கும் சக்தி குறைகிறது. எனவே அதிகப்படியான நீராவி மழையாக பொழிகிறது. ஆதலால் மேற்கு தொடர்ச்சி மலையை கடந்து.
• தக்காண பீடபூமி மீது இக்காற்று வீசுகின்ற பொழுது அக்காற்று வறண்ட காற்றாக வீசுகிறது. எனவே மழைமறைவு பிரதேசமான தக்காண பீடபூமி இக்காற்றால் மழை பெறுவதில்லை

No comments:
Post a Comment