LATEST

Friday, February 14, 2020

இந்திய காலநிலை பகுதி 1

இந்திய காலநிலை பகுதி 1

இந்திய காலநிலை
•    ஏப்ரல் மாதத்தில் கோடைக் காலத்தில் மாங்காய் மழை எனப்படும் மழை பெய்கிறது
 
காலநிலையை கட்டுப்படுத்தும் காரணிகள்
1.    பூமத்திய ரேகையில் இருக்கும் தூரம்
2.    கடல் மட்டத்திலிருந்து உயரம்
3.    கடற்கரையில் இருந்து உயரம்
4.    காற்றும் அதன் திசையும்
5.    மலைகளும் காடுகளும்
6.    நிலச்சரிவு
7.    மண் வகைகள்
8.    கடல் நீரோட்டங்கள் 

•    இந்தியாவின் காலநிலையை அயன மண்டல பருவக்காற்று கால நிலை எனப்படும்
1. குளிர்காலம் - டிசம்பர் முதல் பிப்ரவரி வரை
2. கோடைக்காலம் - மார்ச் முதல் மே வரை
3. தென்மேற்கு பருவக்காலம் - ஜீன் முதல் செப்டம்பர் வரை
4. வடகிழக்கு பருவக் காலம் அல்லது பின்னடையும் பருவக்காலம் - அக்டோபர் முதல் நவம்பர் வரை

குளிர்காலம்: டிசம்பர் - பிப்ரவரி
•    வடக்கிலிருந்து தெற்காக செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது. வடமேற்கில் குறைந்த வெப்பநிலை 5 டிகிரி சென்டி கிரேடு கோடையில் வெப்பநிலை 24 டிகிரி சென்டி கிரேடு
 
கோடைக்காலம் மார்ச் - மே
•    இந்தியாவின் கோடை வெப்பம் தென்னிந்தியாவின் கோடை வெப்பத்தைவிட அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் வடஇந்தியா பெரிய நிலப்பரப்பினை ஆசியாவுடன் இணைந்துள்ளது. மேலும் கடற்கரையிலிருந்து தொலைவில் உள்ளது.
•    ஒரே அட்சத்திலுள்ள நாகபுரி பம்பாயை விட அதிக வெப்பமாக உள்ளது. இதற்கு காரணம் பம்பாய் கடற்கரையில் உள்ளது

No comments:

Post a Comment